கட்டாயப்படுத்தினால் தான் இதை செய்வேன் என்று சொல்வது சரியல்ல! மா. சுப்பிரமணியன் அதிரடி!

0
115

நோய்த்தொற்று பரவல் தமிழகத்தில் கடந்த 2019ஆம் வருடம் மார்ச் மாதம் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இப்படி முக்கியமான கட்டுப்பாடு முக கவசம் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அப்படி செய்தால்தான் நோய்த் தொற்றிலிருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதையும், மத்திய, மாநில, அரசுகள் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல குறைய தொடங்கியதைத் தொடர்ந்து தமிழகத்தில் முகக் கவசம் அணிவது பொதுமக்களிடையே குறைந்து காணப்படுகிறது.

அதாவது நோயுற்ற பரவல் மிகத் தீவிரமாக இருந்த காலகட்டத்தில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் இல்லை இல்லையென்றால் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை மாநில அரசு மேற்கொண்டது.

இதன் காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தார்கள் ஆனால் தற்சமயம் நோய்த்தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருவதால் முக கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும் என்பதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் பொதுமக்கள் தற்போது கவசம் அணியாமல் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி ஒன்றை வழங்கினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, பொது மக்கள் முக கவசம் அணிவது கட்டாயம் ஆனால் அபராதமில்லை. அபராதம் விதிக்கப்படும் என்பதிலிருந்து மட்டுமே விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

மற்றபடி அனைவரும் முகக் கவசம் அணிவது என்பது எல்லோரும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு செய்ய வேண்டிய கடமையாகும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அபராதம் விதித்து தான் ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு பொதுமக்கள் வந்து விடக்கூடாது என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறி பொதுமக்களை வற்புறுத்தி காவல் நிலையத்தில் கைது செய்வோம், அபராதம் விதிப்போம் என்று தெரிவித்த பிறகுதான் என்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வேன் என்று சொல்வது மிகவும் தவறான விஷயம்.

முகக்கவசம் என்பது பொதுமக்களுக்கான விஷயம் அவரவர் தங்களுடைய உயிர் மேல் அக்கறை இருந்தால் மற்றும் ஆசையிருந்தால் முக கவசம் நிச்சயமாக அணிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

அதோடு வடமாநிலங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முகக் கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை.

அதேபோல தனிமனித இடைவெளியையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஆகவே பொதுமக்கள் முகக் கவசம் அணிவது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர்.