அமெரிக்காவில் கொரோனாவுக்கு அடுத்து ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு அச்சத்தில் மக்கள்?

0
60

அமெரிக்கவில் இன்று வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ள வல்லுநர்கள்.

அலாஸ்காவின் ஏங்கரேஜுக்கு தென்மேற்கே 500 மைல் தொலைவிலும், பெர்ரிவில்லின் தொலைதூர குடியேற்றத்திற்கு 60 மைல் தென்கிழக்கு திசையிலும் இந்த நிலநடுக்கம்  உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா அலாஸ்கா பகுதியில் இன்று நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.

பூர்வாங்க பூகம்ப அளவுகளின் அடிப்படையில், பூகம்பத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கடற்கரைகளுக்கு அபாயகரமான சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளது என பூர்வாங்க பூகம்ப அளவுகளின் அடிப்படையில்,பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் வட அமெரிக்காவின் பிற அமெரிக்க மற்றும் கனேடிய பசிபிக் கடற்கரைகளுக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுனாமி அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக பசிபிக் சுனாமி மையம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.7 ஆக பல அதிர்வுகள் பலஇடங்களில் ஏற்பட்டன.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றி இன்னும் குறிப்பிடப்படவில்லை.பூமிக்கு அடியில் உள்ள இரண்டு டெக்டோனிக் தகடுகள் ஒன்றன் மேல் ஒன்று ஏறுவதால் நிலம் அதிர்ச்சி அடைவதாகவும் இதனால் சுனாமி ஏற்படலாம் என்றும் நில அதிர்வு நிபுணர் கூறியுள்ளார்.

9.2 லிட்டரில் பதிவான நிலநடுக்கம் மார்ச் 1964 யில் நடந்து மிகப்பெரிய உயிர் செதத்தை ஏற்படுத்தியது.அப்போது உருவான நிலநடுக்கம் ஏங்கரேஜை பேரழிவிற்கு உட்படுத்தி, சுனாமியைக் கட்டவிழ்த்துவிட்டது. இது அலாஸ்கா வளைகுடா, அமெரிக்க மேற்கு கடற்கரை மற்றும் ஹவாய் ஆகியவற்றைத் தாக்கி பேரழிவை உண்டாக்கி 250’க்கும் மேற்பட்டோர் சுனாமியால் அப்போது கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Pavithra