குர்ஜார் சமூகத்தை சேர்ந்த மக்கள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் – ரயில்கள் மாற்றுப்பாதையில் அனுப்பி விடப்பட்டது!

0
68

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குர்ஜார் உள்பட 5 சமூகத்தினரும், இட ஒதுக்கீடு கேட்டு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 1ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அவர்கள் அறிவித்திருந்தனர். 

அவர்கள் கூறியபடியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மக்கள் கூட்டமாக ஒன்றிணைந்து, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துவதால், அத்தண்டவாளத்தின் வழியே செல்ல வேண்டிய ஏழு ரயில்கள் மாற்றுப்பாதையில்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குர்ஜார் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதாய்  மாநில அரசு உத்தரவு  பிறப்பித்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அணுமதித்திருந்த வரம்பில் 50 விழுக்காடுகளை இந்த உத்தரவு மீறி இருப்பதாக கூறி, உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனால் அச்சமூகத்தை சேர்ந்த  மக்கள் நீதிமன்றத்தால் தடுக்க முடியாத அளவிற்கு இந்த இட ஒதுக்கீட்டை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது பிரிவின்படி அவற்றை வழங்க கோரி, தண்டவாளத்தில் அமர்ந்து, ரயில் போக்குவரத்தை மறித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
Parthipan K