மக்களே உஷார்! இதனை செய்தால் அபராதம் நிச்சயம்!

0
75
People beware! If you do this, the penalty is certain!
People beware! If you do this, the penalty is certain!

மக்களே உஷார்! இதனை செய்தால் அபராதம் நிச்சயம்!

சென்னைமாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும் அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019  ன்படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு ,அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றனர்.மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானக் கழிவுகளை  கொட்டிய நபர்களுக்கும் , சுவரொட்டிகள் ஒட்டிய நபர்களுக்கும் ரூ 15,63,030 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K