மக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!

0
86

மக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!

இயற்கை தரும் அனைத்து காய்கறிகளும் பழங்களும் அனைவரின் உடலும் இதனை ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டால் அதுதான் இல்லை.சிலருக்கும் குறிப்பிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது. ஒரு சிலருக்கு ஒவ்வாமையால் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் ஒரு சிலருக்கு உடலில் ஏற்பட்டுள்ள நோயால் அந்த உணவை சாப்பிட முடியாமல் போய்விடும். அவ்வாறு சீதாப்பழத்தை இந்த நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். தற்பொழுது உள்ள சீசனில் சீதாப்பழம் மிகவும் எளிமையாக கிடைக்கும். சீதாப்பழத்தில் விட்டமின் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. பல இடங்களில் சீதாப்பழத்தை மில்க் ஷேக்குகளில் பயன்படுத்துவது உண்டு. மேலும் சீதாப்பழம் அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். மேனி தோல் பளபளக்கவும் சீதாப்பழம் உதவும். ரத்த சோகை உள்ளவர்களும் சீதாப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். முடி உதிர்வு பிரச்சினை உள்ளவர்கள் சீதாப்பழத்தை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதில் அதிக அளவு பைபர் உள்ளது. இதில் மெக்னீசிய ஊட்டச்சத்து உள்ளதால் அஜீரண கோளாறுகளை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மையும் உண்டு. இவ்வாறு இருக்கும் சீதாப்பழத்தை இந்த நோயாளிகள் சாப்பிடவே கூடாது. குறிப்பாக உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. அதேபோல சிறுநீரகம் மற்றும் கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் சீதாப்பழத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.