மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

0
129

மக்களே எச்சரிக்கை! வெளுத்து வாங்க போகும் கனமழை!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை இலங்கை கடற்கரை அருகில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் இலங்கை வழியாக குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று தமிழக கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்தது.

தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்தது.

இன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னல் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

author avatar
Parthipan K