மக்களே உஷார்! பரவி வரும் புதிய நோய் தொற்று! 

0
91
People beware! A new disease spreading!
People beware! A new disease spreading!

மக்களே உஷார்! பரவி வரும் புதிய நோய் தொற்று!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து அதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.தற்போது தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.ஆனால் கடந்த வாரங்களாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்துள்ளது.

தொடர் மழையின் காரணாமாக உத்தர பிரதேச மாநிலத்தில் கொசுக்கள் மூலம் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.பிரயாக்ராஜ் ,கான்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதிப்பு அடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தனர் அதனால் ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெங்கு பாதுப்புகளை தொடர்ந்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கடந்த சனிக்கிழமை உயர்மட்ட சீராய்வு கூட்டம் நடத்தினார்.அந்த கூட்டத்தில் டெங்கு பாதிப்பு பற்றி மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.மேலும் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் பல பகுதிகளில் டெங்குவால் பலர் பாதிப்படைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

அவர்களில் டெங்கு அதிகம் பாதித்த ஒன்பது நோயாளிகள் மாவட்ட மருத்துவமனையின் டெங்கு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த டெங்கு பரவலை குறைக்கவும் ,டெங்கிற்கு சிகிச்சை அளிக்க சுகாதரா பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் மருந்துகள் ,அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் 60 முதல்  70 பேர் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படுகின்றனர்.அவர்களை பரிசோதனை செய்ததில் ஆறு பெரியவர்கள் மற்றும் ஏழு குழந்தைகள் என மொத்தம் 13பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
Parthipan K