மக்களே உஷார்:! 5G நெட்வொர்க் மாற்றத்திற்காக வரும் கால்! பணம் பறிபோகும் அபாயம்!

0
69

மக்களே உஷார்:! 5G நெட்வொர்க் மாற்றத்திற்காக வரும் கால்! பணம் பறிபோகும் அபாயம்!

தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு நூதனமான முறையில் ஆண்ட்ராய்டு போன்கள் ஹேக் செய்யப்பட்டு,பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

சமீபத்தில் நீங்கள் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள்,உங்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது என்று கூறி பணத்தை பறித்தது ஒரு கொள்ளை கும்பல்.ஆண்களை குறி வைத்து நிர்வாண கால் செய்து பணத்தை பறிக்கும் மோசடியில் ஈடுபட்டது மற்றொரு கொள்ளை கும்பல்,இதுபோன்று சூழலுக்கு ஏற்றவாறு நூதனமான முறையில் பணத்தினை திருடி வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் மற்றொரு நூதனமான திருட்டு பதிவாகியுள்ளது.அதாவது நாங்கள் இந்த நெட்வொர்க்கில் இருந்து பேசுகிறோம் உங்கள் சின்மை 4ஜியில் இருந்து 5ஜிக்கு மாற்றுகிறோம். தற்போது உங்கள் போனிற்கு வரும் ஓடிபி-யை கூறுங்கள் என்று கூறி உங்கள் வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை பறிக்கும் மோசடி கும்பல் உலாவி வருவதாக நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் உங்கள் நெட்வொர்க் மாற்றத்திற்காக எந்தவித அழைப்புகளும்,நெட்வொர்க் கம்பெனிகளிடமிருந்து வராது என்றும் இதுபோன்ற அழைப்புகளை நம்பி ஓடிபி கூறி உங்கள் பணத்தை இழந்து விடாதீர்கள் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

author avatar
Pavithra