மக்களே உஷார்:! நிதி நிறுவனம் என்ற பெயரில் 25 லட்சம் மோசடி!!

0
87

மக்களே உஷார்:! நிதி நிறுவனம் என்ற பெயரில் 25 லட்சம் மோசடி!!

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடையே பணத்தை வசூலித்துவிட்டு கைவரிசை காட்டியதாக மக்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு யனிக் அசஸ்ட் புரோமோட்டர்ஸ் அண்டு எஸ்டேட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மாத தவணையில் பணத்தை கட்டினால் அதிக வட்டியுடன் அசலை சேர்த்து தருவதாக திட்டம் ஒன்றினை அறிவித்தனர்.மேலும் மாதாந்திர தவணையில் வீட்டுமனைகள் வாங்கி தருவதாகவும் அறிவித்திருந்தனர்.இதனை நம்பி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன் நிதி நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை சுமார் 25 லட்சத்திற்கும் மேல் பணம் கட்டியுள்ளனர்.

இந்நிதி நிறுவனத்தில் இடையில் மக்கள் பணம் கேட்ட பொழுது முதிர்வு காலம் முடிந்தவுடன் அசலுடன் வட்டியும் சேர்த்து தருவதாக கூறியுள்ளது.இந்நிலையில் தற்போது நாகர்கோயிலில் உள்ள அந்நிதி நிறுவன அலுவலகத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் தலைமறைவாகியுள்ளனர்.இந்த நிதி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் செய்யது அலி, இயக்குநர் ஜெயசசிதரன், எட்வின் சுதாகர், ரமேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து பணத்தை விரைவில் திரும்பி பெற்றுத் தருமாறு பொதுமக்கள் விழுப்புரம் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

author avatar
Pavithra