சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! வாகன ஓட்டிகள் பெருமகிழ்ச்சி!

0
100

சென்னை ஓஎம்ஆர் சாலையில் இருக்கின்ற சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்ற காரணத்தால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். சென்னை ஓஎம்ஆர் ரோட்டில் பல சர்வதேச நிறுவனங்களும் தங்களுடைய கிளைகளை அமைத்து இருக்கின்றன. சென்னையில் ஐடி ஹார்ட்ஸ்பாட்டாக மாறியிருக்கிறது ஓஎம்ஆர் சாலை.

இந்த சூழ்நிலையில்தான் மத்திய கைலாசத்தில் இருந்து சோழிங்கநல்லூர் மார்க்கமாக சிறுசேரி கிராமம் வரையில் 20 .1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய நான்கு வழி பாதைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சாலை நவீன வசதிகளுடன் பல இருக்கின்றது . அதோடு இரவு பகல் போல் காட்டக்கூடிய விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. வசதி கொடுத்த பின்னரும் கூட கட்டணம் சனிக்கிழமை மாலையில் பெருங்குடி, நாவலூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், அக்கறை, உள்ளிட்ட பகுதிகளில் 5 சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த ரோட்டில் அணைதினமும் ஒரு லட்சம் வாகனங்கள் பயணம் செய்யும் ரோட்டில் 13 வருடங்களாக கட்டண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள் சுங்க சாவடி நிர்வாகிகள். இருந்தாலும் இவற்றை மூடக்கோரி போராட்டங்கள் நடந்திருக்கின்றன. சென்ற ஆட்சியின் போது இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதுகுறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்த சூழ்நிலைகள் தான் தற்சமயம் ஓஎம்ஆர் ரோட்டில் மெட்ரோ பணிகள் நடைபெற இருப்பதால் பெருங்குடி, துரைப்பாக்கம், அக்கறை, மேடவாக்கம், உள்ளிட்ட இடங்களில் இருக்கின்ற சுங்க சாவடிகளில் இனி கட்டணம் வசூலிக்கப்பட்டது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் சட்டசபையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்து இருக்கிறது. ஆகவே கட்டணம் இல்லாமல் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஒட்டிச் செல்கிறார்கள். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு கூறியிருக்கிறார்கள். அதேசமயம் ஓஎம்ஆர் சாலையில் இருக்கின்ற நாவலூர் சுங்க சாவடி தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் இடம்பெறாதது வாகன ஓட்டிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான் அவ்வளவு சுங்க சாவடி சென்னை மாநகராட்சி எல்லைக்கு அருகில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதன் காரணமாக, இது தொடர்பாக தெளிவான விளக்கத்தை பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். என்று சொல்லப்படுகிறது.