அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

0
77

தர்மபுரி மாவட்டத்தில் கர்நாடகத்தை ஒட்டிய பகுதியில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி தர்மபுரி உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல முக்கிய பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது.

அத்துடன் ஒரு காலத்தில் இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்கு கர்நாடக மாநிலம் சொந்தம் கொண்டாடியது என்பது வரலாறு.

அதோடு இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா தலமும் இருப்பதால் இங்கே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றி பார்ப்பதற்காக பொதுமக்கள் வருகை தருவது உண்டு. அதோடு இந்த நீர்வீழ்ச்சியில் நீராடுவது என்றால் பொதுமக்களுக்கு அலாதி பிரியம் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இன்று முதல் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறியிருக்கிறார். நோய்த்தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற பல சுற்றுலா தளங்களில் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. நோய் தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து ஒரு சில பகுதிகளில் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் பொதுமக்கள் வருகைக்கு நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக, மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.

இப்படியான சூழ்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி வெளியேறிவிட்ட ஒரு செய்தி குறிப்பில் நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்வு நீர்வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறியிருக்கிறார்.

ஒகேனக்கல்லுக்கு வருகைதரும் பொதுமக்கள் மடம் செக்போஸ்ட், ஒகேனக்கல் பேருந்து நிலையம், ஆலம்பாடி செக்போஸ்ட், போன்ற மூன்று இடங்களில் சோதனை செய்யப் படுவார்கள். இங்கே வருகை தருகின்ற அனைத்து பொதுமக்களும் கட்டாயமாக இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும், அதற்கான சான்றிதழை இங்கே சமர்ப்பிக்க வேண்டும் ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள், எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்பவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் போன்ற எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அதை உறுதி செய்த பின்னர்தான் அனுமதி வழங்கப்படும் என கூறி இருக்கிறார்.

பொதுமக்கள் அருவி, ஆற்றங்கரை ஓரங்களில் நீராடுவதற்கு அனுமதி கிடையாது, பரிசலில் சென்று சுற்றிப் பார்க்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகள் இன்று முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் மட்டுமே பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.