இனி கட்டாயம்  மாஸ்க் போடாவிட்டால்  அபராதம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!!

0
103
Penalty for not wearing the mask anymore! Tamil Nadu government orders action !!
Penalty for not wearing the mask anymore! Tamil Nadu government orders action !!

இனி கட்டாயம்  மாஸ்க் போடாவிட்டால்  அபராதம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டுடன் இருந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக சுகாதார துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கோவிட் தொற்று சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பரவல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் மேலும் நகர்ப்புறங்களிலும் தொற்று அதிகரித்து வருகின்றது.

பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பதும்,பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணியாமல் இருந்தாலும் கோவிட் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதால் கோவிட் தொற்று நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே வருகின்றது.இதை தவிர்க்க மக்களாகிய நாம்தான் அதிகமாக கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளிகளை கடைப்பிடித்தல் வேண்டும் , முகக்கவசம் அணியும் போது வாய் மற்றும் மூக்கை சேர்த்து மூடியவாறு அணிதல் வேண்டும்.

மேலும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதால் மட்டும்தான் நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். சரியான நேரத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும்.

பொது இடங்களில் முக கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்க அவர்களிடமும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1931 இன் படி அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சுகாதாரத் துறை சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

author avatar
Parthipan K