பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய வேர்க்கடலை தோசை!! தோசை மாவே இல்லாமல் ஸ்பெஷல் டிஷ்!!

0
116

பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய வேர்க்கடலை தோசை!! தோசை மாவே இல்லாமல் ஸ்பெஷல் டிஷ்!!

காலை உணவிற்காக எப்பொழுதும் இட்லி மற்றும் தோசை தான் அதிகமாக வீடு சாப்பிடுவர். தோசை மாவு வீட்டில் இல்லையென்றால் காலை என்ன சமைக்க வேண்டும்? என்று அதிகம் குழப்பமாகவே இருக்கும். இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் ஒரு ஆரோக்கியமான உணவை பற்றிய அமைப்பு தற்போது காணப்போகிறோம்.

இந்த உணவுக்கு தேவைப்படும் முக்கிய பொருள் பச்சை வேர்க்கடலை ஆகும். பச்சை வேர்க்கடலையை வைத்து தான் தோசை சுடுவதற்காக மாவினை நாம் தயார் செய்யப் போகிறோம். மேலும் தோசையும், சட்னியும் முதலில் ஒரு கிண்ணத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பின் மீது நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.

2 கப் பச்சை வேர்க்கடலை சேர்க்க வேண்டும். அத்துடன் தக்காளி மற்றும் 4 பச்சை மிளகாய் காம்பு நீக்கி அப்படியே சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்த பின் வேர்கடலை நன்றாக வெந்ததும், அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

பின் இவற்றில் உள்ள நீரை தனியாக வடிகட்டி எடுத்துக்கொண்டு தக்காளி மற்றும் வரமிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் சிறு துண்டு இஞ்சி மற்றும் 2 ஸ்பூன் துருவிய தேங்காயை சேர்த்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். பிறகு தாளிப்பு கரண்டியினை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, பின் அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வேர்கடலை தோசைக்கு ஏற்ற சட்னி தயாராகிவிட்டது. அடுத்ததாக வேர்க்கடலையை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு இஞ்சி சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். வேர்க்கடலை நன்றாக வெந்ததும், அதனுடன் அரை கப் கோதுமை ரவை, அரை கப் பச்சரிசி மாவு சேர்த்து ஒரு முறை நன்றாக அரைத்துக் கொண்டு மாவை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

இந்த மாவில் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், 2 பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.மாவும் தயார். தோசை சுட்டு இந்த சட்னியுடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

முக்கிய குறிப்பு :

கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவதன் மூலமாக நன்றாக பால் சுரக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் .பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கும். மேலும், உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

author avatar
Jayachithra