Paytm பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! தெரிந்துகொள்ள இதை படியுங்கள் !

0
237

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்குச் சொந்தமான பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) ஆனது BBPOU-களை மின்சாரம், தொலைபேசி, டிடிஹெச், தண்ணீர், எரிவாயு காப்பீடு, கடன் திருப்பிச் செலுத்துதல், ஃபாஸ்டாக் ரீசார்ஜ், கல்வி கட்டணம், கிரெடிட் கார்டு பில்கள் மற்றும் நகராட்சி வரிகளை செலுத்த அனுமதிக்கிறது. இதுவரை பேடியம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் (பிபிபிஎல்) இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை ஒப்புதலின் கீழ் இத்தகைய சேவைகளை வழங்கி வந்தது. பேமென்ட் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007ன் கீழ். பாரத் பில் பேமென்ட் ஆபரேஷன் யூனிட்டாக (பிபிபிஓயு) செயல்பட பிபிபிஎல் ஆர்பிஐயிடம் இருந்து இறுதி அனுமதி பெற்று இருக்கிறது நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில் வெளியிட்டு இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ், பிபிபிஎல் அனைத்து முகவர் நிறுவனங்களையும் அதன் இணையதளத்தில் காண்பிக்கிறது. டிஜிட்டல் சேவைகளுக்கு பயனர்களுக்கு அதிக அணுகலை வழங்குவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதே நிறுவனத்தின் முதன்மையான நோக்கம் என்றும், இந்த ஒப்புதலுடன் வணிக பில்லர்கள் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஏற்றுக்கொள்வதை மேம்படுத்தி, பாதுகாப்பான, வேகமான மற்றும் வசதியான டிரான்ஸாக்ஷன்களை அவர்களுக்கு வழங்குவோம் என்று பேடியம் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடியம் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களுக்கு எளிதாக பணம் செலுத்தலாம் மற்றும் தானியங்கி கட்டணம் மற்றும் நினைவூட்டல் போன்ற அனைத்து விதமான சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

author avatar
Savitha