மாநில ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் நோய்த்தொற்று பிடியில் சிக்கி இருக்கிறார்கள்! மாநில சுகாதாரத்துறை அமைச்சர்!

0
61

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது ஆரம்பத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இதனால் பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட எல்லோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதற்கு மத்திய அரசு தரப்பிலோ பொதுமக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம், மக்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கசப்பு மருந்து கொடுத்து தான் ஆக வேண்டும், அதனை அவர்கள் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும், அப்போதுதான் உடல் நலம் பெறும் என்று நாட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியது.

அதேநேரம் ஆரம்பத்தில் நோய்த்தொற்று பாதிப்பிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சனம் செய்த பொதுமக்கள் பின்னாளில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை புரிந்துகொண்டு அரசுகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தொடங்கினார்கள். இதனால் நோய் தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

இந்த நிலையில், நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து கொண்டே வருகின்ற சூழ்நிலையில், கேரள மாநிலத்தில் தினசரி பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. சில நாட்களாகவே நோய்தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கேரள மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் கொடுத்திருக்கின்ற பதிலில், கேரள மாநிலத்தில் இதுவரையில் 41 கர்ப்பிணி பெண்கள் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 149 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஐ சி எம் ஆர் ஆய்வறிக்கையின் அடிப்படையில் கேரள மாநிலத்தில் நோய் தொற்று பாதிப்பு எதிர்பாற்றல் கண்டறியப்பட்டு விகிதம் கடந்த 2020 ஆம் ஆண்டில் மே மாதம் மற்றும் ஆகஸ்ட் அதோடு டிசம்பர் மாதங்களில் முறையே 0.33 சதவீதம் மற்றும் 0.88 அதோடு 11.6 சதவீதமாக இருந்தது.

நடப்பாண்டில் மே மாதத்தில் 44.4 சதவீதமாக இருந்தது இந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மாநில அரசு நடத்திய நோய் தொற்று நோய் எதிர்ப்பாற்றல் ஆய்வின் அடிப்படையில் இது 82.61 சதவீதம் ஆக அதிகரித்திருக்கிறது.

கேரள மாநில மக்களின் ஒரு மிகப்பெரிய பகுதியைச் சார்ந்தவர்கள் நோய் தொற்றுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அடைந்திருக்கிறார்கள் இதனை மாநில அரசின் ஆய்வுமுடிவுகள் காண்பிக்கின்றன .இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட பல்வேறு பிரிவு பொதுமக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மிக அதிக அளவாக கடலோர மக்களிடம் 93.3 சதவீதம் நபர்களிடம் நோய்த்தொற்று எதிர்ப்பாற்றல் காணப்படுகிறது என்று அமைச்சர் வீணா சார்ஜ் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 17% நபர்கள் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாக கூடிய நிலையில் இருக்கிறார்கள் எனவும், அவர் தெரிவித்திருக்கிறார்.