26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி

0
124

26 வயதில் ஓய்வு பெறலாம் என யோசிக்கும் நம்பர் 1 பவுலர்: ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய அணியின் நம்பர் 1 பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாக சொல்லியுள்ளார்.

டி 20 போட்டிகள் அறிமுகமானதில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் அந்த வடிவிலான போட்டிகளில் விளையாடவே ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த நேரம் மற்றும் அதிக சம்பளம் ஆகியவை மட்டுமில்லாது ரசிகர்களின் ஆதரவும் டி 20 போட்டிகளுக்கு அதிகமாக உள்ளது என்பதும் காரணம். இதனால் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாண்டு உடலை வருத்த விரும்பாத வீரர்கள் ஏதேனும் இரு வடிவிலான போட்டிகளில் மட்டும் விளையாட விரும்புகின்றனர்.

இப்போது அதே போல ஒரு இளம் பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இதே முடிவை எடுத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் அவர் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடி வரும் இவர் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்குக் காரணம் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றுதான் ‘மூன்று வடிவிலான போட்டிகளிலும் தற்போது விளையாடி வருகிறேன். ஆனால் வெள்ளைப்பந்து  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது எளிதானது. அதனால் அவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன். உடல் தொடர்ந்தார் போல 4 ஓவர்கள் வீசுவதை மட்டுமே விரும்புகிறது. டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவது குறித்து யோசனை செய்து வருகிறேன்’ என சொல்லியுள்ளார்.

இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பேட் கம்மின்ஸ் 143 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 61 ஒருநாள் போட்டிகளிலும் 28 டி 20 போட்டிகளிலும் விளையாடிய அவர் முறையே 98 மற்றும் 36 விக்கெட்களை வீழ்த்தியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் இதுபோல ஏதாவது ஒரு வடிவில் ஓய்வு பெறுவது பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவர் ஓய்வு பெற்றால் அது ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக அமையும்.

author avatar
Parthipan K