விஜய் சேதுபதியின் இந்தப்படத்தின் 2-ம் பாகம்  ரெடி!! 

0
63

2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி வெளியான படம் ‘தர்மதுரை’ இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர் .

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து,வைரமுத்து எழுதிய ‘எந்தப் பக்கம் பார்க்கும் போதும்’ பாடல் சிறந்த பாடலுக்கான தேசிய விருதையும் பெற்றது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளாகிறது.

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “இன்று ஆகஸ்ட் 19. தர்மதுரை திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளாகிறது. சீனுராமசாமி, விஜய் சேதுபதி உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. 

அதுமட்டுமில்லாமல் விரைவில் தர்மதுரை 2 -ம் ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது” என்று ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

 

author avatar
Parthipan K