பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!

0
63

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரானது, எதிர்வரும் 21ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி எட்டு நாட்கள் மட்டுமே நடந்து செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி முடிவுற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் சமூக இடைவெளி போன்றவை பின்பற்றப்பட்டும் 25ந்திற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ,மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கும், கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது.

கொரோனா பரவலானது டெல்லியிலே குறையாத நிலையிலே, குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்தது. குளிர்கால கூட்டத்தொடரை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இணைத்து நடத்தி விடலாம் எனவும் தெரிவித்து இருந்தது. ஆனால் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவாதத்தை தவிர்ப்பதற்காகவே, குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு திட்டமிட்டு நடத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

இந்த நிலையிலே மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரவை நேற்றைய தினம் ஆலோசனை செய்தது முடிவிலே பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29ஆம் தேதி ஆரம்பிக்கலாம், ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரை இந்த கூட்டம் நீடிக்கலாம் எனவும் பரிந்துரை செய்தது.

முதல்கட்டமாக, அதாவது முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 29ஆம் நாள் தொடங்கி பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரையில் நடத்தப்படலாம். கூட்டத்தொடர் உடைய இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 8ஆம் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி வரை நடத்தலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

வருடத்தின்உடைய முதல் நாடாளுமன்ற கூட்டம் என்ற காரணத்தால், நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற இருக்கிறார். என்று கட்டுப்பாடு விதிமுறைகள் முழுவதுமாக பின்பற்றப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக விலகலுடன் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.