பெற்றோர்களே முன்வாருங்கள்! கோரிக்கை வைத்த அமைச்சர்!

0
57

நோய் தொற்று காலம் மெல்ல, மெல்ல முடிவடைந்து அனைத்தும் சீரான நிலையில் வந்து கொண்டிருக்கிறது.தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது, கோவில்களில் வழிபாடு செய்வது உள்ளிட்ட பலவற்றிற்கும் 100 சதவீத அனுமதி வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதேபோல பள்ளிகள் செயல்பட தொடங்கியிருக்கின்றன, கல்லூரியில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை.இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் செயல்வழிக்கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகளை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பித்துவைத்தார்.

அதன்பின்னர் இந்த விழாவில் உரையாற்றிய அமைச்சர் அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு அவசியம் என்று தெரிவித்தார், ஒரு சில அரசு பள்ளிகளில் மட்டுமே மழலையர் வகுப்புகள் உள்ளதாகவும், மக்கள் தனியார் பள்ளிகளை நாடும் செயலை மாற்றியமைக்கும் விதத்தில் இன்று அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசு பள்ளியை பெருமையின் அடையாளமாக மாற்றிக் காட்ட உழைத்து வருவதாக தெரிவித்த அவர், அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன் வரவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்திற்கு இதுவரை 60 ஆயிரத்து 400 பேர் தன்னார்வலராக செயல்பட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.