உங்கள் ஆஸ்தி எதுவும் எனக்கு வேண்டாம்! பெற்றோரை உதறி விட்டு காதலனை கரம்பிடித்த கல்லூரி மாணவி!

0
77

பண்டைய காலத்தில் பெண் பிள்ளைகள் அனைவரும் தங்களுடைய பெற்றோர்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்று குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் அவர்களாகவே ஒரு நியதியை வகுத்தார்கள். அதன்படி பெண்பிள்ளைகளும் நடந்து வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆண் பிள்ளைகளாக இருந்தாலும் கூட பெற்றோர்கள் சொல்படிதான் நடக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத நியதி இருந்தது.

அப்படி பெற்றோரின் சொல்படி நடந்த பிள்ளைகளின் வாழ்க்கை என்று பார்த்தால் பலரின் வாழ்க்கை நன்றாகவே அமைந்தது. சென்ற தலைமுறை வரையில் நன்றாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.ஆனால் தற்போதைய தலைமுறையைச் சார்ந்த பிள்ளைகள் உலக அறிவை அதிகம் தெரிந்து கொண்டதால் ஒருசில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஏனென்றால் சுயமாக சிந்திக்கும் திறன் உள்ளிட்டவற்றை தற்போதைய தலைமுறையினர் பெரிய அளவில் பெற்றிருக்கிறார்கள்.

ஆனாலும் தற்போதைய தலைமுறையைச் சார்ந்த பிள்ளைகள் சுயமாக சிந்தித்து செயல்படுகிறார்கள் என்று சொன்னாலும் கூட அவர்கள் சிந்திக்கும் பலவும் முதலில் நன்றாக இருந்தாலும் பிற்காலத்தில் அதுவே அவர்களுக்கு இடையூறாக வந்து நின்று விடுகிறது.இதனால் பிள்ளைகள் நம்முடைய பேச்சை கேட்காமல் போனாலும் பரவாயில்லை அவர்கள் நன்றாக இருந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் வெகுவாக கவலை வருகிறார்கள் ஆனால் பிள்ளைகளை தானும் கெட்டு, தன் பெற்றோர்களின் நிம்மதியும், கெடுத்து விடுகிறார்கள்.

அப்படித்தான் இருக்கிறது தற்போதைய தலைமுறையினரின் வாழ்க்கை ஆனாலும் ஒரு சிலர் பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் தன்போக்கில் முடிவெடுத்து செயல்பட்டாலும், அதனை பெற்றோர்கள் விமர்சனம் செய்தாலும் கூட பிற்காலத்தில் அதை பெற்றோர்கள் பிள்ளைகள் எடுத்த முடிவு சரிதான் என்று ஊரளவில் மெச்சிக் கொள்ளும் அளவிற்கு வாழும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் நடைபெற்ற இதுபோன்ற ஒரு சம்பவம் என்னவென்றால் மார்த்தாண்டம் அருகே இருக்கின்ற கரவிளாகத்தை சார்ந்தவர் ராமச்சந்திரன் இவருடைய மகன் சஜின் 25 வயதுடைய இவர் அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். அந்த கடைக்கு கருங்கால் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் அபிஷா என்ற 21 வயது மாணவி கல்லூரிக்கு தேவையான பொருட்கள் வாங்க வருகை தந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் உண்டானது. அபிஷா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

சஜினுக்கும், அபிஷாவுக்கும், இடையே இருந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இருவரும் காதலித்து வந்தார்கள். இந்த காதலுக்கு அபிஷாவின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதோடு அபிஷாவிடம் இருந்த கைபேசியும் பறித்துக் கொண்டார்கள் இதன் காரணமாக, தன்னுடைய காதலனுடன் பேச முடியாமல் தவித்து வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த மாணவியின் பெற்றோர் வெளியே சென்று இருந்தார்கள் அப்போது அவசரமாக பக்கத்து வீட்டிற்கு சென்ற அபிஷா அங்கே இருந்தவரின் கைபேசியை வாங்கி தன்னுடைய காதலனுக்கு தன்னுடைய நிலையை எடுத்து கூறியிருக்கிறார். அதோடு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும் எனவும், இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து அபிஷாவின் காதலன் சஜின் மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்து அபிசார அழைத்துச் சென்று கரகம் பகுதியில் இருக்கின்ற ஆலயத்தில் நண்பர்களின் உதவியுடன் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள் என்று தெரிகிறது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு மாலையும், கழுத்துமாக வந்து தஞ்சமடைந்தனர். அதோடு தங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.

இதனை அடுத்து மார்த்தாண்டம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார் அவர்களுடைய பெற்றோரை வரவழைத்து உரையாற்றினார் அப்போது அவரின் பெற்றோர் படிப்பு முடிவடைந்த பின்னர் திருமணம் தொடர்பாக பார்த்துக்கொள்ளலாம் என்று அபிஷாவிடம் கெஞ்சி இருக்கிறார்கள். இருந்தாலும் அதனை அவர் காதில் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தன்னுடைய காதல் கணவருடன் செல்வதில் உறுதியாக இருந்திருக்கிறார் அந்த பெண்மணி.

ஒரு கட்டத்தில் அபிஷா அணிந்திருக்கும் நகைகளை கழட்டித் தருமாறு பெற்றோர் கேட்டிருக்கிறார்கள். இதனையடுத்து தான் அணிந்திருந்த நகைகளை காவல்துறையினர் முன்னிலையிலேயே அபிஷா பெற்றோரிடம் கழட்டி கொடுத்துவிட்டார். அவர்கள் இருவரும் திருமண வயதை எட்டி இருந்ததால் அவரை காதல் கணவருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தார்கள் என்ற சம்பவம் காரணமாக, மார்த்தாண்டம் காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.