இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்!

0
209
Panguni Uthra Aaratu Festival at Sabarimala on these dates! Sami darshan only for bookings!
Panguni Uthra Aaratu Festival at Sabarimala on these dates! Sami darshan only for bookings!

இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்!

கொரோனா பெருந்தொற்றின் பொழுது கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் கடந்த 2022 ஆம் ஆண்டு குறைந்த நிலையில் கோவில்களில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். அந்த வகையில் மண்டல மகர விளக்கு சீசன் கடந்த ஜனவரி 20ஆம் தேதி முடிவடைந்தது. 350 கோடி வருமானம் தேவசம்போர்ட்டிற்கு கிடைத்துள்ளது. மேலும் சன்னிதானத்தைச் சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை பெட்டிகளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் குறிப்பாக நாணயங்கள் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது.

மேலும் கடந்த மாசி மாத பூஜைக்காக சபரிமலையில் ஐயப்பன் கோவில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் மறுநாள் முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைக்காக வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில் பங்குனி மாத பூச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் மேல்  சாந்தி ஜெயராம் நம்பூதிரி தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி  தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் வரும் 19ஆம் தேதி அனைத்து நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பங்குனி உத்தரம் ஆராட்டு திருவிழா வரும் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறும் என்றும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K