Pandey Will Release Video about Tamilnadu Politics- News4 Tamil Online News Channel
Pandey Will Release Video about Tamilnadu Politics- News4 Tamil Online News Channel

தமிழக அரசியலையே திசை திருப்பும் வீடியோவை இன்று பாண்டே வெளியிட போவதாக தகவல் கலக்கத்தில் திமுக மற்றும் அதிமுக

கடந்த காலங்களில் தமிழக அரசியல்,சமூக விழிப்புணர்வு மேலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை பற்றிய விவாதங்களை தனியார் தொலைகாட்சியில் திறம்பட நடத்தி நெறிபடுத்தி வந்தவர் ரங்கராஜ் பாண்டே. தான் பணியாற்றிய தொலைகாட்சி நிறுவனத்திலிருந்து திடீரென பாண்டே விலகினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருடைய விலகலுக்கு ஏதேனும் அரசியல் நிர்பந்தம் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது.

தான் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து வெளியேறிய பாண்டே அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. அவர் புதியதாக தொலைக்காட்சி சேனலை ஆரம்பிக்க போகிறார் என்பது போன்ற பல வதந்திகள் பரவி வந்ததன. இந்நிலையில் தான் சாணக்யா என்ற இணையதள சேனலை ஆரம்பிப்பதாக சமீபத்தில் பாண்டே அறிவித்தார். இவ்வாறு தான் ஆரம்பித்த இணையதள சேனலில் அன்றாட அரசியல் நிகழ்வுகளை பற்றிய தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகளை கதிகலங்க வைக்கும் வகையில் சாணக்யா ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டு தனது டிவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்திலும் பாண்டே பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த செய்தியில் குறிபிட்டுள்ளதாவது

@IPL கிரிக்கெட்டை ரசித்துக் கொண்டிருக்கும் தமிழ் கூறும் நல் உலகத்துக்கு, காலை 11.30 மணிக்கு ஒரு வீடியோ காத்திருக்கிறது. @arivalayam @AIADMKOfficial @CMOTamilNadu @mkstalin அரசியல் அதிர்வலை, பிரச்சார போக்கு…இரண்டையும் மாற்றலாம்… சில ச(க்)திகள் அம்பலமாகலாம்… 11.30க்கு…

என்று மக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அரசியல்வாதிகளுக்கு பயத்தை உருவாக்கும் வகையிலும் குறிபிட்டுள்ளார்.

பாண்டே தன்னுடைய பணியிலிருந்து விலகியது முதல் அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று எதிர்பார்த்திருந்த அரசியல்வாதிகளுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடியதில் அவர்களை பற்றிய நிறை குறைகளை பாண்டே அறிந்திருக்கலாம் எனவும் அதை இந்த தேர்தல் சமயத்தில் வெளியிட்டு தேர்தல் போக்கையே மாற்ற முயற்சிக்கலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

இந்த செய்தி வழக்கமாக செய்தி ஊடகங்கள் விளம்பதிற்காக வெளியிடுவது போல முக்கியத்துவம் ஏதுமில்லாமல் போகுமா? அல்லது தமிழக அரசியலில் நடந்த எதாவது சதிகளை அம்பலப்படுத்துமா? என்று பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் காத்திருக்கின்றனர்