பல்லை பிடுங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி!

0
190
பல்லைபிடிங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி!
பல்லைபிடிங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி!

பல்லை பிடுங்கிய பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன! மனித உரிமைஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி!

விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்ட நபரை பல்லைபிடிங்கி கொடுமைப்படுத்திய சம்பவத்தில் நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று மனித உரிமை ஆணையம் தமிழக டிஜிபிக்கு சரமாரி கேள்வி.மேலும் இந்த சம்பவத்தில் தமிழக டிஜிபி 4 வாரங்களுக்குள் விளங்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியது மனித உரிமை ஆணையம்.

பல்லைபிடிங்கி கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கை  விசாரித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் பரித்துரையின் பேரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் 13 பேரிடம் நடைபெற்ற விசாரணையில் 3 பேர் மட்டும் போலீசாருக்கு சாதகமாக வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதிக்கப்ப்பட்ட 5 பேர் ஆஜராகி தங்கள் விளக்கத்தை அளித்துள்ளனர்.

அப்பொழுது அவர்கள் கூறும்போது அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மட்டுமில்லாமல் காவல்துறையை சேர்ந்த சில அதிகாரிகளும் கடுமையாக நடந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர் பல்வீர்சிங் மீது புகார் அளிக்காமல் இருக்க போலீசார் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் இன்று நேரில் மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் வேண்டும் என்று மனித உரிமைகள்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இன்று மனித உரிமைகள்  ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார் முன்னாள் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங்.

author avatar
Parthipan K