பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மேலும் ஒரு சர்ச்சை?

0
63

பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த தனிஷ் கனேரியா, இங்கிலாந்தில் கவுண்டீ போட்டிகளில் விளையாடி சூதாட்ட புகாரில் சிக்கயவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.பாகிஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்ற அவரை பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், தனிஷ் கனேரியா இந்து என்பதால், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட பாகிஸ்தான் வீரர்கள் விரும்பியதில்லை என்று தெரிவித்திருந்தார்.அவரின் சாதனைக்கு கூட தக்க அங்கீகாரம் தர மறுக்கப்பட்டது என்று புதிய சர்ச்சை கிளப்பினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தனிஷ் கனேரியா, அக்தர் கூறியிருப்பது உண்மை என்றும் , தன்னுடன் பேச விரும்பாத வீரர்களின் பெயரை விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து பேச முன்பெல்லாம் தைரியம் இல்லாத நிலையில், தற்போது தன்னால் முடியும் என்றும் கனேரியா தெரிவித்துள்ளார்.

தனிஷ் கனோரியா 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 18 ஆட்டங்களில் 15 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் 1000-க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தீவிரவாத காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எந்த அணியும் சுற்று பயணம் மேற்கொள்ளாத நிலையில் தனிஷ் கனோரியா இந்தக் கருத்து மேலும் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
CineDesk