புல்வாமா தாக்குதலுக்காக பாகிஸ்தானை தாக்கினால் பதில் தாக்குதல் நடத்துவோம் என இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்
புல்வாமா தற்கொலை படை தாக்குதலுக்குக்காக பாகிஸ்தானை தாக்கினால் இந்தியாவின் மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமையன்று புல்வாமா-ஜம்மு நெடுஞ்சாலையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பல்வேறு முன்னெச்சரிக்கைகளையும் மீறி நடைபெற்ற இந்த தாக்குதல் நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரிடத்திலிருந்தும் கண்டனங்கள் வெளிவர தொடங்கியது. 40 க்கும் மேற்பட்ட வீரர்களின் உயிர்களை பலிகொண்ட இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பிற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

இதனையடுத்து இந்திய அரசு இது போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் பாக்கிஸ்தான் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது.மேலும் பாகிஸ்தானை MFN பட்டியலிலிருந்தும் நீக்கியது.

இது குறித்து இன்று விளக்கம் அளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது, போதிய ஆதரமின்றி புல்வாமா தற்கொலை படைத் தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்த கூடாது.பாகிஸ்தான் மக்கள் என்றும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை.மேலும் இது குறித்து பாகிஸ்தான் குடிமகன் தான் ஈடுபட்டுள்ளான் என்பதற்காக தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க நாங்கள் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தகுந்த ஆதரமில்லாமல் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் அதற்காக இந்தியாவின் மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என்றும் மிரட்டல் விடுக்கும் விதத்தில் பேசியுள்ளார்.போர் உருவாவது மனிதர்கள் கையில் இருப்பதாகவும் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது கடவுளின் கையில் இருப்பதாகவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இப்பிரச்னைகள் அனைத்திற்கும் பேச்சு வார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.