விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை!

0
132

விதிகளை மீறி பந்தில் எச்சிலைத் தடவிய பாகிஸ்தான் வீரர்… கிளம்பிய சர்ச்சை!

இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகவும் பரபரப்பாக திக் திக் என கடைசி பந்து வரை நடந்து முடிந்தது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இரு தினங்களுக்கு முன்னர் மெல்போர்னில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி விராட் கோலியின் அனாசயமான இன்னிங்ஸால் கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி 10 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அதன் பின்னர் போராடி விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சிறப்பாக விளையாடியது. அதிலும் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி வெற்றியை இந்திய அணி வசமாக்கினார்.

இந்த போட்டியில் இறுதி ஓவரில் நோபால் வீசியது மற்றும் ப்ரி ஹிட் பந்தில் போல்ட் ஆகி ரன்கள் சேர்த்தது என சர்ச்சைகள் உருவாகின. இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

இறுதி ஒவரை வீசிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நவாஸ் பந்தில் எச்சிலை தொட்டு தடவி வீசியது இப்போது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் ஐசிசி புதிய விதிமுறைகளின் படி பந்தில் எச்சிலை தொட்டு வீசக்கூடாது என அறிவுறுத்தி இருந்தது.

அதை பின்பற்றாமல் இப்போது நவாஸ் பந்தில் எச்சில் தடவி ரிவர்ஸ் ஸ்விங் செய்ய பயன்படுத்தியதால் அவர் மேலும் பாகிஸ்தான் அணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனங்கள் எழுந்துள்ளன.