கோலத்திற்கும் பாகிஸ்தானிற்கும் தொடர்பு ; அதிர்ச்சி தகவல்

0
74

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில். சென்னையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நூதன முறையில் வீடுகள் முன்பு கோலம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கூட கோலம் மூலம் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

இந்நிலையில் கடந்த 29-ந்தேதி, சென்னை பெசன்ட்நகரில் கல்லூரி மாணவிகள் சிலர் ஒன்று கூடி வீடுகள் முன்பு திடீரென கோலம் போட்டனர். கோலத்துக்கு அருகில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்களையும் அவர்கள் எழுதி வைத்தனர். இது தொடர்பாக 8 பெண்கள் கைது செய்யப்பட்டு பிறகு  விடுவிக்கப்பட்டனர். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கோலம் போட்டு கைதான 8 பேரில் காயத்ரி என்ற பெண்ணுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் “கோலம் போட்டு போலீசில் பிடிபட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட காயத்ரி கந்தாடை என்பவருக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக அவரே தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பேஸ்புக் புரோபைலில் ‘பைட்ஸ் பார் ஆல்’ பாகிஸ்தான் என்கிற நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிறுவனம், “அசோசியே‌ஷன் ஆப் ஆல் பாகிஸ்தான் சிட்டிசன் ஜேனலிஸ்ட்” என்கிற அமைப்பை சேர்ந்ததாகும். இவரது தொடர்பு குறித்தும், பின்னணி பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். “இவ்வாறு விஸ்வநாதன் தெரிவித்தார்.

author avatar
Parthipan K