பாகிஸ்தான் பொறுப்பான ஆட்டம்! முதல் நாள் இறுதியில் 212 ரன்கள்!

0
92

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் ஜமைக்காவின் ஆரம்பமானது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனடிப்படையில் பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் 3 பேர் மிக விரைவில் அவுட்டானதன் காரணமாக, 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம்,பவாத் ஆலம் உள்ளிட்டோர் தங்களுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதன் காரணமாக, விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டார்கள் இருவரும் அரைசதம் கண்டு அசத்தி இருந்தார்கள்.

அணியின் ரன் எண்ணிக்கை 160 இருந்த சமயத்தில் பாபர் அசாம் 75 ரன்னில் வெளியேறினார். ஆலம் 76 ரன்னில் காயம் காரணமாக, பெவிலியன் திரும்பினார்.

முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 74 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்திருந்தது. ரிஸ்வான் 22 ரன்னும் அஷ்ரப் 23 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கேமர் ரோச் 2 சீலஸ் ஒரு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார்கள்.