கண்களில் வலியா?கண் வலியை குறைக்க பயனுள்ள குறிப்புகள்! 

0
195
#image_title

கண்களில் வலியா?கண் வலியை குறைக்க பயனுள்ள குறிப்புகள்!

டிவி ,லேப்டாப், செல்போன் போன்ற எலக்ட்ரானிக் கேட்ச் ஜெட்டுகளைப் பயன்படுத்துதல். இடைவெளி கொடுக்காமல் புத்தகங்களை படிப்பது போன்ற கண்கள் பெரிதும் பாதிக்கப்படும். இருப்பினும் இன்றைய காலத்தில் மின்னணு சாதனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மின்னணு சாதனங்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் .இதனால் விரைவாகவே அவர்களுக்கு கண் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடுகிறது.
பல்வேறு கண் பாதிப்புகள் ஏற்பட்டு வலியும் வேதனையும் உண்டாகுகிறது.
இதற்கு தீர்வு தரும் வகையிலான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்சனைக்கு சில பொதுவான அறிகுறிகள் இருக்கின்றன.
_கண்கள் சோர்ந்து போகுதல், அரிப்பு உண்டாகுதல்,
_கண்களில் எரிச்சல் உண்டாவது
_கண்கள் வறண்டு காணப்படுவது மற்றும் கண்களில் நீர் கரைந்து காணப்படுவது
_வெயிலில் திடீரென்று போனால் இரட்டை பார்வை தெரிவது. உற்றுப் பார்த்தால் கண்கள் சுழன்று கொண்டு வருவது
_அடிக்கடி தலைவலி ஏற்படுதல் முதுகு தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதியில் பல நாட்களாக வேதனை நிலவுவது,_
_வெளிச்சத்தை பார்த்தால் கண்கள் கூசுவது மற்றும் புத்தகங்கள் படிக்க சிரமப்படுவது உள்ளிட்டவை கண்களில் அழுத்தம் ஏற்படுவதற்கு பொதுவான அறிகுறிகள் ஆகும்.

அமெரிக்கன் ஆப்டோ மெட்ரிக் கூட்டமைப்புசமீபத்தில் கண் பார்வை நலன் தொடர்பாக சில ஆய்வுகளை மேற்கொண்டது.அதில் கண் அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கும் வறண்ட கண்கள் தலைவலி மற்றும் மங்கலான பார்வை உள்ளிட்ட பொதுவான அறிகுறிகள் ஏற்படும். குறிப்பிட்ட சில பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கண் பிரச்சனைகள் நீங்கிவிடும்.

1. சரியான இடைவெளி தேவை:
டிஜிட்டல் சாதனங்களில் பணிபுரியும் போது சரியான இடைவெளி மற்றும் சரியான தொலைவில் இருந்து வேலை செய்வது முக்கியம். திரையை உங்கள் கண்களுக்கு அருகில் வைக்க வேண்டாம். திரையை சில அடி தூரத்தில் வைக்கவும்.திரை நேராக அல்லது உங்கள் கண் மட்டத்திற்கு சற்று கீழே இருப்பதை உறுதி செய்யவும். தொலைபேசி மற்றும் லேப்டாப்பிலும் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

2. கண் யோகா பயிற்சி:
கண் யோகா செய்வதன் மூலம் உங்கள் கண் பார்வை மற்றும் கண்களை ஆதரிக்கும் தசைகளை மேம்படுத்த இது உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. கண் அழுத்தத்தை குறைக்கிறது. பொதுவாக கண் யோகா பயிற்சிகள் கண் சிமிட்டுதல், உள்ளங்கைகள், கண்களை நீட்டுதல் ஆகியவை அடங்கும். இதனால் உடல் தளர்ந்துஅமைதி அடையும். இதன் மூலம் உங்களுடைய கண் இயக்கத்திறன் பலப்படும்.

3. பிரகாசமான விளக்குகள் வேண்டாம்:
மங்கலான அல்லது மிகவும் பிரகாசமான விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் அவை கண் அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் படிக்கும் போது வெளிச்சம் உங்கள் பின்னால் வரவேண்டும்.நீங்கள் தொலைபேசிகள் மற்றும் லேப்டாப்புகளில் திரைப்படங்களை பார்க்கிறீர்கள் என்றால் வெளிச்சம் குறைவாக இருக்கும் படி உறுதி செய்து கொள்ளுங்கள்.

4. கண் சிமிட்டுவது நல்லது:
அதிக நேரம் தெரியவை பார்த்துக் கொண்டிருப்பதால் கண் சிமிட்டுவதை மறந்து விடுவீர்கள். குறைவாக அடிக்கடி சிமிட்டுவது உங்கள் கண்களை உலர்த்தும். இது கண் எரிச்சலை ஏற்படுத்தும். அத்தகைய நேரங்களில் கண் சொட்டுகளை பயன்படுத்துங்கள். இது கண்களை தளர்த்தும். கண்களை மீண்டும் ஈரப்பதம் ஆக்குகிறது.எனவே திரையை அதிகம் பார்க்க வேண்டியிருக்கும் போது அடிக்கடி கண் சிமிட்டி கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கண்களை திறப்பதில் சிக்கல் இருந்தால், நீங்கள் அவற்றுக்கு ஓய்வு தர வேண்டும் என்று பொருள்.எனவே அந்த நேரத்தில் கண்களை மூடி உட்கார்ந்து அல்லது படுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் எண்ணங்களை உடைக்கும். கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது.

5. 20க்கு 20 விதியை பின்பற்றுங்கள்:
ஒரே மாதிரியான பொருட்களை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்ப்பது இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும். அதுக்கு 20க்கு 20 விதியை பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் குறைந்தது20 வினாடிகளுக்கும் உங்கள் பணியில் இருந்து 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை பார்க்க வேண்டும். மேலும் நீங்கள் காலையில் இருந்து மதிய உணவு நேரம் வரை கணினியியல் நேரம் செலவிடுவதை வாடிக்கையாகவே உள்ளது. முடிந்தால் பசுமையான பொருட்களையும் தாவரங்களையும் பாருங்கள். இவை உங்கள் கண் அழுத்தத்தை குறைக்கும். நன்றி