2020 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

0
58

2020 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

ஒவ்வொரு வருடமும் கலை, அறிவியல், சமூக சேவை, வர்த்தகம், தொழில், மருத்துவம், பொதுவாழ்வு, ஆன்மிகம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி, சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு ‘பத்ம’ விருதுகளை வழங்கி அவர்களை கவுரவித்து வருகிறது.

வருடா வருடம் குடியரசு தின விழாவையொட்டி இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது தொடர்ந்து மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த 2020-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 

அந்த வகையில், மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகளான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் போன்றோருக்கு இந்த ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் விளையாட்டுப் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் மறைந்த பாதுகாப்புதுறை அமைச்சரும் கோவா முதல் அமைச்சரான மனோகர் பாரிக்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை பிவி சிந்து உள்பட 16 பேருக்கு 2020 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.

இவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த டிவிஸ். வேணு சீனிவாசன் , சமூக சேவை செய்து வரும் திருமதி.கிருஷ்ணம்மாள், ஜெகநாதன் உள்பட 16 பேருக்கு 2020 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 7 நபர்களுக்கு பத்ம விபூஷண் விருதும், 16 நபர்களுக்கு பத்ம பூஷண் விருதும், 118 நபர்களுக்கு பத்மஸ்ரீ விருதும் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது.

author avatar
Parthipan K