சேலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் .!!

0
72

சின்னசேலத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு சரக்கு ரயில் மூலமாக கர்நாடக மாநிலத்திற்கு 100 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட வந்த நிலையில் ,அத்தியாவசிய பொருட்கள் மட்டும் சரக்கு ரயில் மூலமாக பல்வேறு மாநிலங்களில் அனுப்பி வைத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தற்போது சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சிறப்பு சரக்கு ரயில் மூலம் தமிழகத்திற்கு அருகே உள்ள மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 12- ஆம் தேதி சேலத்திலிருந்து தெலுங்கனா மாநிலத்திற்கு 80 நெல் அறுவடை இயந்திரங்கள் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரு அடுத்த சூரத்கல்லுக்கு சுமார் 100 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் மற்றும் 32 வேகன்கள் கொண்ட சிறப்பு சரக்கு ரயில்கள் சின்னசேலத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சரக்கு ரயில்களில் இணைக்கப்பட்ட பெட்டிகளின் மூலம் நெல் அறுவடை இயந்திரங்கள் ஓட்டுநர் மற்றும் பயனாளர்கள் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகத்திற்கு சுமார் 12 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

சரக்கு ரயில் மூலமாக எடுத்து செல்வதனால் சாலை மார்க்கமாக எடுத்துச்செல்லும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தவிப்பதாகவும், ரயில் மூலமாக கொண்டு செல்வது குறைந்த செலவில் இருப்பதாகவும் அறுவடை இயந்திர வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

author avatar
Parthipan K