பா ரஞ்சித்- விக்ரம் படத்தின் கதாநாயகி இவர்தானா?… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

0
83

பா ரஞ்சித்- விக்ரம் படத்தின் கதாநாயகி இவர்தானா?… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம் கேஜிஎப் பகுதிகளில் நடக்க உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பா.ரஞ்சித் இருந்து வருகிறார்.இவர் இதுவரை தமிழில் ஐந்து திரைப்படங்களை இயக்கி உள்ளார்.ஆனால் குறுகிய காலத்திலேயே இவரின் திரைப்படங்கள் அதிக அளவில் பேசப்பட்டன.மேலும் வெற்றியும் பெற்றன.இதற்குக் காரணம் இவரின் படங்கள் அரசியல் சார்ந்து இருக்கும்.2012ம் ஆண்டு இவர் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் இவர் இயக்குனராக அறிமுகம் ஆனார்.

சமீபத்தில் இவர் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் ரிலீஸான நிலையில், அடுத்து அவர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிரார். கோலார் தங்க வயல்களில் வசித்த 19 ஆம் நூற்றாண்டு தமிழர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டும் உருவாக்கப்படுகிறதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஷூட்டிங் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கப்பட உள்ளது. இதுவரை விக்ரம் படத்துக்கு இல்லாத அளவுக்கு பெரும் பொருட்செலவில் இந்த படம் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறக்கு விக்ரம்முக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.