EWS தீர்ப்பு : மறு ஆய்வு செய்யும் காங்கிரஸ்.. ப. சிதம்பரம் வரவேற்பு..!

0
96

EWS 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்யும் என அறிவித்ததற்கு ப. சிதம்பரம் வரவேற்பு அளித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்பளித்தது. இந்த தீர்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்பளித்தது. இந்த தீர்ப்பை திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர்.

ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சியின் வடமாநில தலைவர்கள் வரவேற்ற நிலையில், தென்னிந்தியாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், மூத்த வழக்கறிஞரும் , காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் சிங்வி தீர்ப்பின் சட்டநுணுக்கங்கள் குறித்தும் காங்கிரஸ் தலைவர்தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு காங்கிரஸ்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

காங்கிரஸ்கட்சியின் இந்த முடிவை வரவேற்பதாகவும், புதிய இடஒதுக்கீட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சின்ஹோ கமிஷனின் படி, SC, ST, OBC மக்கள் தொகையில் 82 சதவீதம் பேர் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள நிலையில், இவர்கள் ஏழை வகுப்பை உருவாக்குகிறார்கள். அதில், 82 சதவீத மக்களை தவிர்த்து விட்டு எப்படி விலக முடியும் ? என்பதை ஆராய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>I welcome the statement of the AICC that the party will undertake a review of the judgement of the SC on the reservation for Economically Weaker Sections.<br><br>The exclusion of SC, ST and OBC from the new reservation has caused widespread concern among the people.</p>&mdash; P. Chidambaram (@PChidambaram_IN) <a href=”https://twitter.com/PChidambaram_IN/status/1591439980286672900?ref_src=twsrc%5Etfw”>November 12, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>