கைது செய்யப்படுகிறாரா சிதம்பரம்? தேசிய அளவில் ட்ரெண்டான #ArrestPChidambaram!

0
80

நாட்டில் நோய்த்தொற்று இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோயின் காரணமாக, நாட்டில் பல மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் ஆக்சிஜன் படுக்கை வசதி தடுப்பூசி போன்றவற்றிற்கு தட்டுப்பாடு உண்டாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தடுப்பு மருந்துகளுக்காக மக்கள் அல்லாடும் ஒரு நிலை இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதுதொடர்பாக பதிவுகளை சமூக வலைதளங்களில் அவ்வபோது பார்க்கமுடிகிறது. எல்லா மாநிலமும் ஒவ்வொரு விதமான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு தொடர்பாக அரசியல் தலைவர்களும் திரைப்படங்களும் தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா சிதம்பரம் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி கையிருப்பு குறித்து மத்திய அரசுக்கு எதிராக பல கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் அவருடைய கருத்துக்களுக்கு எதிராக சமூக வலைதள வாசிகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

தன்னுடைய சமூக வலைதளத்தில் கடந்த 29ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், அவருடைய அரசும், மாநிலங்களின் தடுப்பூசி தொடர்பாக எந்தவிதமான தட்டுப்பாடும் இல்லை என்று தெரிவித்து வருகிறது. மே மாதம் 1ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கின்ற 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆன தடுப்பூசி செலுத்தும் திட்டம் எந்த மாநிலத்திலும் ஆரம்பிக்க படுவது போன்று தெரியவில்லை.

காரணம் தடுப்பூசி பற்றாக்குறை இதுகுறித்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் உண்மைக்குப் புறம்பான காட்சிகளை பார்க்க முடிகிறது. எல்லாப் பத்திரிகைகளும் தவறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அனைத்து மருத்துவர்களும் பொய் சொல்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும் மே மாதம் 1ஆம் தேதி தடுப்பூசி மையங்களில் இருந்து மக்கள் தடுப்பூசி இல்லை என்று திரும்பி வந்தால் ஹர்ஷவர்தன் பதவி விலகுவாரா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

அதோடு நாட்டின் மக்களை முட்டாள்களாக நினைக்கும் நரேந்திரமோடி அரசுக்கு எதிராக புரட்சியில் எல்லோரும் இறங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. அவர் ட்வீட் செய்து இரண்டு நாட்கள் கடந்து இருந்தாலும் நேற்று தான் இதற்கு மிக அதிகமானோர் எதிர்ப்பு தெரிவித்து ரீட்வீட் செய்திருந்தார்கள்.

மக்களிடம் கிளர்ச்சியை தூண்டும் இதமாக உரையாற்றிய சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். இதனைத்தொடர்ந்து டிவிட்டரில் அரெஸ்ட் பி சிதம்பரம் என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி இருக்கிறது.