என் மீது வழக்குப் போடுங்கள்! பிரியங்கா காந்தி ஆவேசம்!

0
78

தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிசன் தட்டுப்பாடு உண்டாகியிருக்கிறது. இதனால் பல உயிர்கள் அழிவதற்கான வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.பல மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு இது தொடர்பான பல வலியுறுத்தி உதவி செய்து வருகிறது ஆகவே மத்திய அரசும் இந்த நிலை விரைவில் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். இந்தநிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உத்தரப்பிரதேசத்தில் எந்த ஒரு மருத்துவ மனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது.

கான்பூர் ஐஐடி பிஹெச்யு ஐஐடி போன்றவற்றுடன் ஒன்றிணைந்து மாநிலத்தின் ஆக்சிஜன் தேவை வழங்கல் விநியோகத்தை முறையாக நாங்கள் கண்காணிப்பு செய்து வருகிறோம். நோயால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஆக்சிசன் தேவைப்படுவது கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் தேவைப்படுபவர்கள் மட்டுமே அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனாலும் மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதுபோன்ற தவறான தோற்றம் உருவாக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் இது போன்ற தகவல்கள் பரவி வருகிறது. யூகத்தின் அடிப்படையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று வதந்திகளை பரப்புவார்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் முதலமைச்சரே உத்தரபிரதேசம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்துவருகிறது. நீங்கள் என்மீது வழக்கு போடுங்கள், என் சொத்தை பறிமுதல் செய்யுங்கள், ஆனாலும் இப்போது இருக்கும் நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக மக்களின் உயிரை காப்பாற்றும் வேலையை ஆரம்பியுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.