திமுக கூட்டணியில் ஓவைசி இணைப்பு? திமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

0
83

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்தித்த பின்னர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் உரையாற்றிய பொழுது, திமுக உடைய தேர்தல் அறிக்கையிலே இடம்பெறக்கூடிய முக்கியமான சில அம்சங்களை அந்த கட்சியின் தலைவரிடம் அறிக்கையாக இன்றையதினம் கொடுத்து இருக்கின்றோம். இப்போது இருக்கும் சூழ்நிலையில்,, சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும் வளர வேண்டும் மாநிலங்களின் உரிமைகள் காக்கப்படுவது மிக முக்கியம். ஆனாலும் மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசானது இந்த மூன்று விஷயங்களுக்கு எதிராக செயலாற்றி வருகிறது.

மாநிலங்கள் உடைய உரிமைகளை பறிக்கும் இடத்திலே பாஜக அரசு இருக்கின்றது. அதற்கு ஒத்து ஊதும் நிலையில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அதிமுகவின் அரசு இருக்கிறது .அஞ்சலக துறையிலே கணக்கர் வேலைக்கு நடைபெற இருக்கும் தேர்வானது ஆங்கில மொழியிலும், இந்தி மொழியிலும், மட்டுமே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தினமும் தமிழர்களுடைய உரிமையை படிப்பதற்கு சமம். தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு சென்ற பத்து வருடங்களாக 3.5 சதவீத அடிப்படையின் மூலம் வேலையாட்கள் தேர்வு செய்யப்படவே இல்லை. இதன் காரணமாக, அநேக பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான காலி பணியிடங்கள் இருக்கின்றன. அவற்றை நிரப்புவதற்கு சிறப்பு முகாம்களை நடத்திட வேண்டும்.

இந்தக் கூட்டணியில் இது வேறு சில சிறுபான்மையின அமைப்புகள் இருந்தாலும் கூட எங்களுக்கு எந்த ஒரு சிக்கலும் கிடையாது. இந்த கட்சியின் தலைவர் கூட்டணியின் நலன் தொடர்பாக அவர் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் நாங்கள் ஆதரவாக செயல்படுவோம் என்று ஜவாஹிருல்லாஹ் தெரிவித்திருக்கிறார். எதிர்க் கட்சியான திமுகவின் கூட்டணியில் ஓவைசி கட்சி இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது அதோடு அந்த கட்சியை திமுக முஸ்லிம்களின் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அந்தக் கட்சியை இணைப்பதற்கு தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையினர் இயக்கங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில்தான், திமுக கூட்டணியில் வேறு சில சிறுபான்மையின இயக்கங்கள் ஒன்றிணைந்தாலும் எங்களுக்கு எந்த ஒரு சிக்கலும் கிடையாது என்று ஜவாஹிருல்லா சொல்லி இருக்கிறார்.