திரையரங்குகளை போல் மாறும் OTT இணையதளம்!ஒரே தேதியில் மோதும் இரண்டு தமிழ் படங்கள்!

0
67

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆறு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன.இதனால் திரைத்துறை பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்கள் சிலர் தாங்கள் தயாரித்த படங்களை OTT இணையதளத்திற்கு விற்பனை செய்து அதனை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்து வருகின்றனர்.அதற்கான நல்ல தொகையையும் பெற்றுக்கொள்கின்றனர். 

இவ்வாறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் படங்கள் இதுவரை  ஒரு நாளில் ஒரே படம் மட்டும்தான் ரிலீஸ் ஆகியிருந்தது.ஆனால் தற்போது ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தியேட்டர்களில் ஒரே நாளில் இரண்டு மூன்று படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது போய் இப்போது அந்த மாதிரியான நிலைமை OTT யில் உருவாகியுள்ளது.

இதுவரை OTT இணைய தளத்தில் வெளிவந்த எந்த ஒரு படமும் அந்தளவு பெரும் வெற்றியை ஈட்டி தரவில்லை. வெங்கட் பிரபு ,வைபவ் நடிப்பில் வெளிவந்த படம் மட்டுமே வரவேற்பை பெற்றது.ஆனால் பொன்மகள்வந்தாள், பென்குவின், தேனி, யாதுமாகி நின்றாய் போன்ற படங்கள் போட்டியில் வெளிவந்து படுதோல்வியை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு படமாக வெளிவந்த நிலையில் தற்போது ஒரே தேதியில் இரண்டு தமிழ் படங்கள் வெளிவர இருக்கின்றன. தியேட்டர்களில் போட்டியை கிளப்புவது போல OTT தளங்களிலும் அதே ஐடியாவை பின்பற்றி பின்பற்ற உள்ளனர் என இணையதள வாசிகள் கூறுகின்றனர்.

ஜி5 தளத்தில் விஜய் சேதுபதி நடித்த கா/பே ரணசிங்கம் படமும் அமேசான் தளத்தில் மாதவன் ,அனுஷ்கா நடித்த நிசப்தம் படமும் அக்டோபர் இரண்டாம் தேதி ஒன்றாக வெளியாக உள்ளது.இதில் எந்த படம் அதிக அளவு பெரும் என்பதை காண தமிழ் சினிமா உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

author avatar
Parthipan K