திட்டமிட்ட துணை முதல்வர்! செய்து முடித்த முதல்வர்!

0
42

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச்செயலகத்தில் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பாக தேனி மாவட்டம் தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் 765 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு இருக்கின்ற புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இணையத்திற்கு காணொளி மூலமாக அடிக்கல் நாட்டி இருக்கின்றார்.

தமிழக முதல்வர் கடந்த 20-3-2020 அன்று சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் அதன்படியே தேனி மாவட்டம் தேனி மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் 253 புள்ளி 64 ஏக்கர் பரப்பில் 765 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இருக்கின்ற புதிய அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு முதல்வர் இன்று காணொளி மூலமாக அடிக்கல் நாட்டி இருக்கின்றார்.

புதிதாக அமையவிருக்கும் இந்த கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் விருதுநகர் மதுரை திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருக்கின்ற கால்நடைகளுக்கான மருத்துவ சேவையை நிறைவு செய்யும் இந்த கல்லூரி கேரள மாநில எல்லையில் அமைந்திருப்பதால் பால் இறைச்சி மற்றும் கால்நடை உற்பத்தி பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு உதவியாக இருக்கும்.

2020-21ம் கல்வி ஆண்டே இந்த கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 40 மாணவர்கள் சேர்க்கப்பட இருக்கிறார்கள் இந்த புதிய கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நன்றாக வடிவமைக்கப்பட்ட நிர்வாக கட்டிடம் நவீன வகுப்பறைகளுடன் கூடிய எட்டு கல்வி தொகுதி கட்டிடங்கள் மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான தனித்தனி விடுதி வசதிகள் உணவகம் கல்லூரி முதல்வருக்கான குடியிருப்பு விடுதி கண்காணிப்பாளருக்கான குடியிருப்பு விருந்தினர் இல்லம் போன்ற பல வசதிகளுடன் கட்டப்பட இருக்கின்றது.

அதோடு இந்த கல்லூரியிலே நவீன ஆய்வாக வசதிகளுடன் கூடிய பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் தொழில்நுட்பம் நிலையங்கள் உள்பட 15 துறைகள் கால்நடை உற்பத்தி திட்டங்களை விவரிப்பதற்காக கால்நடை பண்ணை வளாகம் கால்நடை சிகிச்சை சார்ந்த பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவமனை வளாகம் ஆகிய வசதிகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை செயலாளர் கே சண்முகம் கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே கோபால் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி பாலச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கட்டுமான பணிகள் முடியும் வரையில் தற்காலிகமாக பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே இருக்கின்ற தனியார் கட்டிடத்தில் வகுப்புகள் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன மொத்தத்தில் பன்னீர்செல்வம் போட்டுக்கொடுத்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு இருக்கின்றார் முதல்வர் பழனிசாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here