சட்டசபையில் முதல் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மனதார வரவேற்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

0
90

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்திருக்கிறார். இதனை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் வரவேற்று இருக்கிறார்.சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் இன்று முதல் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கருணாநிதி 13 முறை தொடர்ச்சியாக தமிழக சட்டசபை உறுப்பினராக இருந்தவர், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் அரசியல் களத்தில் இனி யாரும் அவர் இடத்தை நெருங்க இயலாது. தோல்வி அவரை தொட்டுக்கூட பார்த்ததில்லை வெற்றி அவரை விட்டதே இல்லை என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் 80 வருடங்கள் பொது வாழ்க்கை, 70 வருடங்கள் திரைத்துறை மற்றும் பத்திரிக்கையாளர், 60 வருடகால சட்டமன்ற உறுப்பினர் வாழ்க்கை, 50 வருடகால திமுக தலைவர் சகாப்தம் என வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாக இருந்தவர் கருணாநிதி என்று தெரிவித்திருக்கிறார்.நான் முதலமைச்சராக கோட்டையில் இருந்தாலும் அங்கு இருந்தபடியே குடிசைகளை பற்றியே சிந்திப்பவர் என்று முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார். சமுதாய சீர்திருத்த தொண்டு, வளர்ச்சிப் பணிகள், சமதர்ம நோக்கு உள்ளிட்ட மூன்றையும் தான் தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக கருணாநிதி கொண்டிருந்தார். அதன் அடிப்படையில்தான் ஆட்சியை வழிநடத்தினார் என்று குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து, மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, உரிமை அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம், மகளிருக்கு சொத்தில் சம உரிமை, என்ற சட்டம், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இன மக்களுக்கான சமூக உரிமைகள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட ஐயாயிரம் கோடி கடன் ரத்து, சென்னை தரமணியில் டைட்டில் பார்க், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், என கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் போன்றவற்றை அவர் குறிப்பிட்டு பேசினார்.

அதோடு சென்ற அரை நூற்றாண்டு காலமாக நிரந்தர தலைப்பு செய்தியாக இருந்த கலைஞர் கலந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி நிரந்தர ஓய்வுக்கு சென்றிருக்கின்றார். ஓய்வு எடுக்கச் சென்றார் என்று நான் சொன்னால் கூட அவர் இந்த தமிழ் சமுதாயத்திற்கு ஏராளமானவற்றை கொடுத்துவிட்டு தான் ஓய்வெடுக்க போய் இருக்கின்றார். தான் மறைந்தால் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் ஓய்வெடுக்க சென்று இருக்கிறார். ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று 40 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதச் சொன்ன மக்கள் தொண்டர் அவர் அண்ணா நீ இருக்கும் இடம் தேடி வரும் வரையில் இரவலாக உன் இதயத்தை தந்திடு நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா என்று 50 ஆண்டுகளுக்கு முன்னரே உறுதிமொழி எடுத்துக் கொண்டவர் என்று தெரிவித்தார்.

அதோடு தமிழ்நாட்டை ஏற்படுத்திய தமிழினத் தலைவர் கருணாநிதி செய்த பணிகளை போற்றும் விதத்தில் அவருடைய வாழ்வின் சாதனைகளையும், சிந்தனைகளையும், பொதுமக்களுக்கு தெரிவிக்கும் விதத்திலும் அதோடு வருங்கால இளம் தலைமுறையினரும் அதனை அறிய கூடிய விதத்தில் நவீன விளக்கப்படங்களுடன் சென்னை காமராஜர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.25 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் முப்பத்தி ஒன்பது கோடி மதிப்பீட்டில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பினை வரவேற்று உரையாற்றிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் கருணாநிதிக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். அதிமுக உறுப்பினர்களும் மனதார வரவேற்கிறோம். அதிமுக உறுப்பினர்களும் மனதார வரவேற்பதற்காக கடமைப்பட்டிருக்கின்றோம் அவரை பற்றிய அனைத்து சிறப்பம்சங்களும் அவருடைய நினைவிடத்தில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன். என்னுடைய தந்தை தீவிர கருணாநிதி பக்தர் அவர் பெட்டியில் எப்போதும் கலைஞரின் பராசக்தி பட வசனம் புத்தகம் இருக்கும் என உரையாற்றியிருக்கிறார் ஓபிஎஸ்.

இருந்தாலும் கருணாநிதி மறைந்தபோது அவருக்கு மெரினாவில் இடம் கொடுப்பதற்கு அதிமுக அரசு மறுத்தது இதன் காரணமாக, தற்போதைய முதலமைச்சரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கே சென்று அண்ணன் பக்கத்தில் தான் வீடு வழங்க வேண்டும் என்று கலைஞர் அடிக்கடி தெரிவிப்பார். அதுதான் கலைஞரின் கடைசி ஆசை என்று கேட்டார் ஆனால் மெரினாவில் இடம் தருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதற்கிடையில் திமுக சார்பாக கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டு அவசர வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஹுலுவாடி ரமேஷ் வீட்டில் இரவு முதல் காலை வரை விசாரணை நடந்தது.சென்னை கிண்டியில் காமராஜர் நினைவிடம் அருகே கருணாநிதியை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குகிறோம் என்று அதிமுக அரசு தெரிவித்தது. ஆனாலும் திமுக தரப்பில் கலைஞருக்கு மெரினாவில் தான் இடம் வேண்டும் என்று கேட்டு வாதத்தை முன் வைத்திருந்தார்கள்.

இந்த நிலையில், விடிய, விடிய நடந்த விசாரணையை அடுத்து மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது இந்த தீர்ப்பை கேட்டு கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் ராஜாஜி மஹால் பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரத்துடன் எழுப்பியிருக்கிறார்கள். கருணாநிதியின் மகனும் தற்போதைய முதலமைச்சருமான இந்த தீர்ப்பை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு அழத்தொடங்கினார் அங்கே சூழ்ந்திருந்த தொண்டர்களுக்கு ஸ்டாலின் கைது கைகூப்பி நன்றி தெரிவித்தார். இதனை அடுத்து கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.