ஓபிஎஸ் இபிஎஸ் இடையே மீண்டும் உருவான போஸ்டர் யுத்தம்!

0
92

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது. பல இடங்களில் தோல்வியை சந்தித்திருக்கிறது அந்தக் கட்சி. தென்மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வி மற்றும் டெல்டா மாவட்டங்களில் உண்டான தோல்வியும் அதோடு தலைநகர் சென்னையில் ஏற்பட்ட தோல்வியும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதிமுக ஆளுங்கட்சியாக வராவிட்டாலும் கூட பலமான எதிர்க்கட்சியாக அமர்வதற்க்கான அந்தஸ்தைப் பெற்றது. இந்தநிலையில், அடுத்தது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவகாரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே நேரடியான மோதல் உண்டானது. அந்த சமயத்தில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு அதிக அளவில் இருந்ததால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப் பட்டார். ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட இருவரும் நேரடியாக சந்தித்து பேசிக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதன் பின்னரும் கூட சசிகலா உரையாடிய ஆடியோ வெளியான பின்னர் ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் சந்தித்துப் பேசும் ஒரு நிலை வந்தது.இதற்கிடையில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் அதிமுக தலைமைக்கு எதிராக மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் சுவரொட்டி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அந்த சுவரொட்டியில் அதிமுக கட்சி செயல்பாடுகள் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் எந்தவிதமான அறிவுரையும் இல்லாமல் நடக்குமானால் நிச்சயமாக தலைமை கழகத்தின் முற்றுகையிடுவோம் என்று மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் அதிமுக என்ற கோட்டையின் பாதுகாவலர் ஓபிஎஸ் அவர்களே உங்கள் தலைமையில் கழகத்தை வழி நடத்துவோம் என்று அதிமுகவின் தேனி மாவட்ட மீனவர் அணி சார்பாக பேனர் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதோடு மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் இடையே சுவரொட்டி யுத்தம் நடந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.