தேமுதிக எடுத்த அதிரடி முடிவு! அதிர்ந்துபோன அதிமுக!

0
123

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக அதனுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வந்தது . அதன் முதல் படியாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது இந்த இரண்டு தொகுதி ஒதுக்கீடுகளும் ஒப்பந்தமாகி கையெழுத்தாகி இருக்கிறது.இதனைத் தொடர்ந்து அதிமுக தன்னுடைய ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இந்த நிலையில், தேமுதிகவுடன் கடந்த மூன்று நாட்களாகவே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 15 தொகுதிகள் வரையில் ஒதுக்குவதற்கு அந்தக் கட்சியின் தலைமை சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

ஆனால் தேமுதிக தரப்பில் இன்னும் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். இருந்தாலும் தேமுதிகவின் வாக்கு சதவீதத்தை கணக்கில் வைத்து தொகுதிகளை ஒதுக்குவதில் எடப்பாடி பழனிச்சாமி கறார் காட்டி வருவதாக சொல்கிறார்கள். ஆனாலும் இந்தத் தொகுதி பங்கீடு விவகாரத்தில் தேமுதிக தரப்பு இன்னமும் பிடிவாதமா தான் இருந்து வருவதாக சொல்கிறார்கள். ஏனென்றால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தனக்கு வேண்டிய தொகுதிகளை கேட்டு பெற்றது தேமுதிக அப்படி இருக்கும்போது இன்று அவர் இல்லை என்றாலும் கூட தன்னுடைய செல்வாக்கு சரியாமல் இருப்பதாகவே அந்த கட்சி கருதுகிறது.

ஆனாலும் தமிழகம் முழுவதிலுமே அந்த கட்சிக்கான செல்வாக்கு மெல்ல மெல்ல சரிந்து விட்டது என்பதை அந்த கட்சி ஏற்க மறுக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கடந்த 2011ஆம் ஆண்டு அளவில் அந்த கட்சி தமிழகத்தில் இருந்த செல்வாக்குடன் இப்போது இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் அதனை ஏற்க மறுத்து அந்த கட்சியின் தலைமை பிடிவாதமாக இருந்து வருகிறது.ஒருபுறம் தொகுதிகளை கொடுப்பதில் கறார் காட்டினாலும் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிகவை தன்னுடைய கூட்டணியிலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். ஏனென்றால் விஜயகாந்த் ஒருவேளை தேமுதிக சார்பாக வந்து பிரச்சாரம் செய்தால் ஒரு கணிசமான வாக்குகளை பெறலாம் என்பதே அவரது திட்டமாக இருந்து வருவதாக சொல்கிறார்கள்.

ஆகவேதான் தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேற முயற்சி செய்தாலும் அவர்களை சமாதானப்படுத்தி தங்களுடைய கூட்டணிக்கு உள்ளேயே வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று தெரிவிக்கிறார்கள்.இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் இன்றைய தினம் அதிமுக மற்றும் தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இன்று தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.