சசிகலாவை நெருங்கிய ஓபிஎஸ்! அதிர்ச்சியில் இபிஎஸ்!

0
71

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கடந்த 10 வருடகாலமாக சென்னை பசுமை வழி சாலை யில் இருந்த அரசு இல்லமான தென்பெண்ணை இல்லத்தில் வசித்து வந்தார். அவர் தற்போதைய சட்டமன்ற கட்சி தலைவராக அதாவது எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் அவருடைய அரசு இல்லத்தில் தொடர்ச்சியாக வசிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கும் என்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவரே தொடர்ச்சியாக அரசு இல்லத்தில் தங்கி இருக்கிறார்.

ஆகவே ஓபிஎஸ் தன்னுடைய அரசு வீட்டை காலி செய்து விட்டு நேற்று வாஸ்து நாள் என்ற காரணத்தால் டி நகர் கிருஷ்ணா தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் குடியேறி இருக்கின்றார். என்று சொல்லப்படுகிறது. முதலில் மிகவும் எளிமையான முறையில் நேற்று அவர் அந்த வீட்டில் குடியேறி இருக்கிறார்.

நேற்றைய தினம் அதிமுகவில் தலைமையகத்தில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி நல்ல நாளாக இருப்பதன் காரணமாக வருகை தந்து ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருக்கின்றார். அந்த கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர்களும் உரையாற்றியபோது சசிகலா காட்சியும் இல்லை. அவர் முன்னரே அரசியலிலிருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டார். அதோடு அவர் அதிமுக தொண்டர்களுடன் தொடர்பில் இல்லை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுடன் அவர் பேசி வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் கேபி முனுசாமி தெரிவித்த அதே கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் எந்தவிதமான கருத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதே சமயம் தன்னுடைய நடவடிக்கைகள் மூலமாக பன்னீர்செல்வம் ஒரு சில செய்திகளை மற்றவர்களுக்கு உணர்த்துவதாக தெரிவிக்கிறார்கள் அவருடைய தரப்பைச் சேர்ந்தவர்கள்.

நேற்று பன்னீர்செல்வம் பால் காய்ச்சிய புது வீட்டிற்கு தற்சமயம் சசிகலா தங்கியிருக்கும் இருக்கும் வீட்டிற்கு இடையே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம்தான் என்று சொல்கிறார்கள். அவர்கள் இருவரும் தேவைப்பட்டால் நடைபயணத்தில் சென்று சந்தித்துவிட்டு வந்துவிடுவார் ஓபிஎஸ் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் இருவருக்குமான தகவல் பரிமாற்றத்திற்கு இது மிகவும் எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்த விதத்தில் சசிகலாவை பன்னீர்செல்வம் நெருங்கி விட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.