ஓபிஎஸ் இடமிருந்து புதிய ஆளுநருக்கு பறந்த கடிதம்! மன்னித்துவிடுங்கள் மனமுருகிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

0
89

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் சென்ற வாரத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார் இதன் காரணமாக தமிழகத்தின் ஆளுநர் பதவி காலியானது இதனைத்தொடர்ந்து மேகாலயா மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை தமிழகத்தின் ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.ஆர் என் ரவி என்று அழைக்கப்படும் ரவீந்திர நாராயணன் ரவி காவல்துறை மற்றும் உளவுத்துறையில் பணியாற்றிய மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒருவர் என்று சொல்லப்படுகிறது.

இதுவரையில் நீதித் துறையில் சிறந்து விளங்கிய நீதிபதிகளை மட்டுமே மாநிலங்களுக்கு ஆளுநராக மத்திய அரசு நியமனம் செய்து வந்தது ஆனால் முதன் முறையாக தமிழகத்திற்கு காவல்துறை மற்றும் உளவுத் துறையில் பணிபுரிந்த ஒருவரை ஆளுநராக நியமனம் செய்திருப்பது எல்லோருடைய மத்தியிலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.இந்த ஆளுநர் நியமனத்திற்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ரவீந்திர நாராயணன் ரவி இன்று காலை முறைப்படி தமிழக ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அதேபோல சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ஆனால் இந்த பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சி துணைத் தலைவரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. இதனால் அவர் ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இயலாமல் போனதற்கு வருந்துவதாகவும், ஆளுநர் தயவு செய்து தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறா.ர் பல்வேறு துறைகளில் தங்களுக்கு அனுபவம் இருக்கிறது அந்த அனுபவம் தமிழகத்தை நிச்சயமாக வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கு உதவி புரியும் என்று தான் நம்புவதாக அந்த கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

இன்று காலை பத்து முப்பது மணி அளவில் சென்னை கிண்டியில் இருக்கின்ற ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பதவியேற்பு விழா நடந்தது. இதில் தமிழக தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி புதிய ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு பிறகு உரையாற்றிய புதிய ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி அவர் ஆற்றிய உரையில் மிகவும் தொன்மையான கலாச்சாரம் உடைய தமிழ்நாட்டிற்கு ஆளுநராக பொறுப்பேற்று இருப்பது பெருமை தருகிறது என்றும்,தமிழக மக்கள் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வேன் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து தன்னை மன்னித்து விடவேண்டும் என்றும், ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு தமிழகத்தில் புதிதாக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக சார்பாகவும், என்னுடைய தனிப்பட்ட முறையிலும், மிகவும் தொன்மையான கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ்நாட்டிற்கு உங்களை ஆளுநராக வரவேற்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஓபிஎஸ்,

அதோடு உங்களுடைய பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய மனைவி விஜயலட்சுமி அவர்களின் மறைவால் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்வதற்காக சொந்த ஊரிலிருந்து வருகிறேன் என்றும், இதனால் பதவியேற்பு விழாவில் தன்னால் பங்கேற்க முடியவில்லை எனவும், தெரிவித்திருக்கின்றார் பன்னீர்செல்வம். இன்னும் ஒருசில தினங்களில் சென்னைக்கு வரும் சமயத்தில் முறையாக அனுமதியுடன் உங்களை நான் சந்திக்கிறேன் என்று அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார் ஒபிஎஸ்.