ஹே ராஜா ஒன்றானோம் இன்று! சேலத்தில் ஐக்கியமான முதல்வர், துணை முதல்வர்!

0
70

எதிர்வரும் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக துணை அமைச்சர் பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதில் முக்கியமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் அந்த வகையில், தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக சென்று கொரோனா சிகிச்சை மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் போன்றவற்றை பார்வையிட்டு வந்தார்.

அப்போது அவர் தமிழகம் முழுவதிலும் செல்லும் இடங்களில் எல்லாம் ஏகப்பட்ட கூட்டங்கள் கூடியது. அப்போதே அப்படி என்றால் தற்போது தேர்தல் சமயம் என்பதால் கேட்கவா வேண்டும் தற்போது அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது.இதனை கண்ட எதிர்க்கட்சி மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. சுமார் பத்தாண்டு காலமாக ஆட்சியில் இருக்கக்கூடிய ஒரு கட்சி மக்களிடையே அந்த ஆட்சியின் காரணமாக வெறுப்புகள் உண்டாகியிருக்கும் அதன் காரணமாக முதல்வர் செல்லும் இடங்களில் அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கிடைக்கப் போவதில்லை என்று நினைத்திருந்த திமுகவிற்கு இது பேரதிர்ச்சியாக இருக்கிறது.

தமிழகம் முழுவதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எங்கே சென்றாலும் சரி தான் அங்கே பெரிய அளவில் கூட்டம் கூடிவிடுகிறது. அதுவும் அவர் பேசும் விதம் அவர் முதல்வர் பொறுப்புக்கு வந்த புதிதில் இருந்ததை விட இப்போது மிகவும் மாறிவிட்டது என்று சொல்லப்படுகிறது.அதனால் அவர் பேசுவதை கேட்பதற்காகவே பல்வேறு தரப்பினரும் அவர் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வருகை தருகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் போன்ற பல தலைவர்களும் தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் திமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சேலம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதற்காக சேலத்திற்கு வந்திருக்கின்ற துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் வேலைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றையதினம் முதலமைச்சரின் எடப்பாடி தொகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.