அதிமுகவில் இணைகிறாரா சசிகலா? எடப்பாடி ஓபிஎஸ் ஆலோசனையால் பரபரப்பு!

0
80

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் காரணத்தால், தமிழகம் முழுவதிலும் அரசியல் கட்சிகள் எல்லாம் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அதோடு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போன்றோர் மிக தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து ஓய்வின்றி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களும் தமிழகம் முழுவதும் சிறிதும் இடைவெளி இன்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

இந்த நிலையில், ஆரம்பத்தில் அமைதியாக இருந்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சமீபகாலமாக தன்னை தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்.
அந்த விதத்தில், முதல் அமைச்சரின் சொந்த மாவட்டமாக இருக்கும் சேலம் மாவட்டத்திற்கு நேற்றைய தினம் பிரச்சாரத்திற்காக வந்து சேர்ந்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
முதலில் சேலத்தில் தன்னுடைய பரப்புரையை தொடங்கிய ஓபிஎஸ் அதன் பிறகு முதல் அமைச்சரின் சொந்த தொகுதியாக இருக்கும் எடப்பாடிக்கு சென்று அங்கே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேகரித்து இருக்கிறார் அந்த சமயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

அதேபோல நேற்று காலை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சேலம் வந்ததை தொடர்ந்து அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்று இருக்கிறார் அதன்பிறகு ஒரு சில நிமிடங்கள் சில முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தங்கியிருந்த தனியார் சொகுசு விடுதியில் அவரை நேரில் சந்தித்தார் அந்த சமயத்தில் தன்னுடைய மாவட்டத்திற்கு வருகைதந்த அதற்காக அவருக்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார் அதன்பிறகு முதல்வரும் துணை முதல்வரும் சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் சில முக்கிய ஆலோசனைகள் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிமுகவின் முக்கிய புள்ளிகளான முதல்வரும் துணை முதல்வரும் தனித்தனியாக தமிழகம் முழுவதிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் திடீரென்று அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து ஆலோசனை செய்து இருப்பது தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற மக்களால் உற்று நோக்கப்படுகிறது. அவர்கள் இருவரும் நடத்திய ஆலோசனையில் சசிகலாவை மறுபடியும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை தெரிவிக்கப்படுகிறது.

அதோடு சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாகவே மறுப்பு தெரிவித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது.முதலில் சசிகலாவை எதிர்த்து அதிமுகவில் புரட்சியை கிளப்பியவர் துணை முதல்வர் ஓபிஎஸ் தான் ஆனால் காலமும் சூழ்நிலையும் மாறினால் எல்லாம் மாறும் என்று செல்வதற்கு ஏற்ப தற்சமயம் முதலில் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முதலமைச்சர் ஈபிஎஸ் தற்போது அதற்கு நேர்மாறாக மாறி இருக்கிறார்.

இப்பொழுது துணை முதல்வர் ஓபிஎஸ் சசிகலாவிற்கு ஆதரவான மனோநிலையை கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. சசிகலாவை அதிமுகவில் இருந்து விலக்கி வைத்திருப்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி பெறுவது கடினம் என்று சொல்கிறார்கள்.

அதோடு துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் வெற்றி கூட சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இது எல்லாம் கணக்குப் போட்டுத்தான் சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் வந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.அதோடு தற்போது சசிகலா அரசியலை விட்டு விலகி இருப்பதும் இதற்கான ஒரு சமிக்‌ஷை தான் என்று சொல்லப்படுகிறது.

அதோடு ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமை தற்போது இல்லாத நிலையில், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேவை இல்லாமல் அதிமுகவினரின் வாக்குகள் பிரிந்து செல்வதை அந்த கட்சியின் தலைமையை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் விரைவிலேயே முதல்வரும் துணை முதல்வரும் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.