நான் சொன்னதை கேட்கலை! கடுகடுப்பில் துணை முதல்வர்!

0
64

சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக மொத்த தமிழ்நாடும் காத்துக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு கணக்குகளை தன்னகத்தே போட்டு வருகிறார்கள்.அதிமுகவைப் பொறுத்தவரையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பரவலாக பிரச்சாரம் செய்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இணைந்து பிரசாரம் செய்வது என்ற வழக்கமான பாணியை கைவிட்டுவிட்டு தற்சமயம் இருவருமே தனித்தனியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், தேர்தலுக்குப் பிறகு தனக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளுடன் மற்றும் நெருக்கமான பத்திரிக்கையாளர்கள் இடமும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்து இருக்கிறார். அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் சிலர் பன்னீர்செல்வத்திடம் அதிமுகதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்க ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்து இருக்கிறார் ஓபிஎஸ்.

அதே சமயம் தன்னை சந்திக்க வரும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களிடம் அம்மா உயிருடன் இருந்த சமயத்தில் அனைத்து தேர்தலுக்குப் பின்னரும் தன்னைக் கூப்பிட்டு உரையாடி கள நிலவரத்தை தெரிந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு தமிழகம் முழுவதும் தன்னை வைத்து நிலைமையை அறிந்து கொள்வார் என்றும் தெரிவித்திருக்கிறார். அதே போல தானும் அவர் கேட்கிறாரே என்று உண்மையை சொல்லி விடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.அதாவது தேர்தலின் பொழுது தான் தெரிவித்த சில முக்கிய கருத்துக்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தேமுதிகவை நம் கூட்டணியில் வைத்திருப்பது ஆரம்பத்திலிருந்தே அவருக்கு பிடிக்கவில்லை. அதேபோல சசிகலாவையும் நம்முடைய கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாம் என்று நான் தெரிவித்தேன். அதையும் அவர் கேட்கவில்லை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சையும் அவர் கேட்கவில்லை இதனால் நாம் வெற்றியடைவது கடினம் என்று தெரிவித்திருக்கிறார்.ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்து வருகிறார்.அவருடைய நம்பிக்கை வெற்றி பெறுமா என்பது மே மாதம் இரண்டாம் தேதிதான் தெரியும்.