வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சாரத்தில் இறங்கிய ஓ.பி.எஸ் ! அதிமுகவினர் உற்சாகம்!

0
86

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் தன்னுடைய மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை தொடர்ந்து சில வார காலமாக சென்னை பக்கம் தலையை காட்டாமல் தன்னுடைய சொந்த ஊரிலேயே தங்கி இருந்தார்.

இதனால் கட்சியிலும், அவருடைய தாக்கம் பெரிதாக இல்லை தன்னுடைய மனைவிக்கான ஈமக்கிரியை செய்வதற்காக அவர் தன்னுடைய சொந்த ஊரிலேயே தங்கி இருந்தார்.

ஆனால் சென்னையில் அவரின் பின்பம் வேறுமாதிரியாக இருந்தது, அதாவது ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி என்ற ஒற்றை தலைமையை நோக்கி நகர்கிறதா? போன்ற கேள்விகள் தமிழகம் முழுவதும் எதிரொலிக்க தொடங்கின..

இந்த சூழ்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் பல்லாவரத்தை அடுத்தபடியாக இருக்கக்கூடிய ஈச்சங்காடு பகுதியில் நடந்தது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அந்த சமயத்தில், உரையாற்றிய ஓபிஎஸ் ஒரு மாநிலம் அனைத்து நிலையிலும் நன்றாக இருப்பது அவசியம், சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும், பொதுமக்கள் பயம் இல்லாமல் நிம்மதியாக வாழவேண்டும், அந்த சூழ்நிலை தமிழகத்தில் கிடையாது. பெண்கள் தனியாக செல்வதற்கு இயலவில்லை. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து இருக்கும் புளுகு மூட்டைகள் ஸ்டாலின் மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள். முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்கள் என விமர்சனம் செய்திருக்கிறார் ஓபிஎஸ்.

மேலும் பேசிய அவர் அதற்காக சட்டமசோதா நிறைவேற்றி இருக்கிறார்கள் ஆனால் அந்த சட்ட மசோதாவை முன்பாகவே நாங்கள் நிறைவேற்றி விட்டோம். அதை ஸ்டாலின் ரினிவல் செய்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா அவர்களின் ஆத்மாவிற்கு பரிசாக வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.