துணை முதல்வர் போட்ட ட்விட்! ஆடி போன திமுக தலைமை!

0
62

மீத்தேன் திட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதி அளித்த நிலையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில்தான் அதற்கு தடை விதித்து விவசாயிகளை பாதுகாத்ததாக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கின்றார்.

இது சம்பந்தமாக ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல கபட நாடகம் ஆடும் திமுக 4.1.2011 அன்றைய தினம் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது தமிழக விவசாயிகளுக்கு செய்த கடுமையான துரோகம் ஆனால் அந்த திட்டத்திற்கு 17 -7 -2013 அன்று அந்த மீத்தேன் திட்டத்திற்கு தடை விதிக்க விவசாயிகளுடைய நலனை காத்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள் தான் என்று தெரிவித்தார் தமிழக துணை முதல்வர்.

விவசாயிகளின் நலன் காப்பதற்காக காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து 20- 2 -2020 அன்றைய தினம் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவை இயற்றியது மாண்புமிகு அம்மாவின் அரசு தான் இதனை தமிழக மக்கள் நன்றாகவே அறிவர் விவசாயிகளுடைய பாதுகாவலன் அம்மா அவர்களின் அரசு மட்டுமே ஆகவே திமுகவின் பொய்யான உரைகளை எப்போதுமே தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்து இருக்கின்றார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் சூழ்நிலையில் அதிமுக மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு அளிக்கின்றது அதனை விமர்சனம் செய்த திமுக அதிமுக விவசாயிகளுடைய முதுகெலும்பை முறிக்கும் சட்டத்திற்கு அதிமுக அரசு வாக்களித்து இருப்பதாகவும் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அறிக்கையை வெளியிட்டுள்ளார் இதற்கு பதிலடி கொடுக்கும் துணை முதல்வர் இந்த பதிவை வெளியிட்டு இருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.