பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம்!  பண்ருட்டி ராமசந்திரன் திடீர் மிரட்டல்! 

0
141
#image_title

பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம்!  பண்ருட்டி ராமசந்திரன் திடீர் மிரட்டல்! 

அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட  நிலையிலும் எப்போதும்போல “ஒருங்கிணைப்பாளர்”  என்றே ஓபிஎஸ் பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் விழா மாநாடு நடைபெறுகிறது.

நேற்றைய தினம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் எடப்பாடி தரப்பை கடுமையாக சாடியதுடன், அதிமுக விதிகளையும் தெளிவாக கூறினர். “அதிமுக தலைமை கழகம் ஜானகி அம்மையார்,எம்ஜியார்க்கு தந்தது.அது எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தமானது இல்லை. கட்சிக்கு தொண்டர்கள் முக்கியம், அதை வெற்றி பெற செய்ய மக்கள் ஆதரவு முக்கியம். அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருகிறதா, ஓபிஎஸ்க்கு இருகிறதா என்பதை மாநாட்டில், மூலம் தெரியும் என்றார்.

ஓபிஎஸ் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து இந்த மாநாட்டை நடத்தவில்லையாம். பாஜகவின் மேலிடத்திற்கு தங்களை நிருபிக்கவே மாநாட்டை நடத்துவதாக தெறிகிறது.

இந்த மாநாட்டில் சசிகலா மற்றும் தினகரனுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் மாநாட்டிற்கு வருவார்களா? என்று தெரியவில்லை..

அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி தரப்பில் தொடர்த்து வார்னிங் தரப்பட்டு வருகிறது. அதிமுகவின்  அங்கீகாரம் பெற்ற கொடியாய் பன்னீர்செல்வம் அணி பயன்படுத்தாமல் தவிர்த்துள்ளனர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதிமுக சட்ட விதிகளைபுரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ என்று தோன்றுகிறது.

author avatar
Parthipan K