சட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின்

0
73

சட்டப்பேரவையில் அதிமுக அரசை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் கடுப்பானார் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் தினமும் ஒவ்வொரு துறையின் மீதான மானியக் கோரிக்கையும் அதன் மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டின் நலன் சார்ந்து பல ஆக்கப்பூர்வமான செயல்கள் நடந்து வருவதை தினமும் அறிகிறோம்.

அந்த வகையிலே ஒவ்வொரு சட்டமன்ற உருப்பினரும் தங்கள் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை முதல்வரிடமும் துறை சார்ந்த அமைச்சரிடமும் கோரிக்கைகளாக வைத்து வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதனா விவாதத்தில் மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்ற வாசகம் எங்கே எழுதப்பட்டுள்ளது தெரியுமா? அது அந்த பாட்டிலேயே எழுதப்பட்டுள்ளது எனற குற்றச்சாட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்ப, உடனே எழுந்த அமைச்சர் தங்கமணி அவர்கள் உங்கள் ஆட்சியிலே பாட்டிலே என்ன திருக்குறளா எழுதப்பட்டிருந்தது என்று கேட்க திமுகவினரோ வாயடைத்துப் போனார்கள்.

இன்றைக்கு மின்துறை மீதான விவாதத்தின் போது மின்சாரத்துறையில் புதிதாக உருவாக்க உள்ள துணைமின் நிலையங்கள் மற்றும் திட்டங்களை அறகவித்து முடித்த பின்பு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்களுக்கு எந்த வித காகிதமும் கையில் இல்லாமல் சிறு தடுமாற்றம் கூட இல்லாமல் அமைச்சர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இதனால் வியந்துபோன எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அவர்கள் எழுந்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திறமையான அமைச்சரை பார்க்கிறேன். இதுபோல எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த வித துண்டு சீட்டும் இல்லாமல் பதிலளிப்பதே ஒரு “கெத்து” என்று பாராட்டினார்.

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் மீது பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் எப்போதும் கையில் துண்டு சீட்டு இல்லாமல் பேச மாட்டார் என்பதே.
எதிர்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் திருமுருகன் பேசி இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர்.

அந்த நேரத்திலே எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கடும் கோபம் கொண்டு துரைமுருகன் அவர்களை பார்த்துள்ளார். துரைமுருகன் அவர்கள் பாராட்டியது ஒரு ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்பட்டாலும் அவர் திமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்பார் என்ற செய்திகள் வரும் நேரத்தில் இதுபோன்று பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது

author avatar
Parthipan K